பக்கம்:சிலம்பின் கதை.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

176

சிலம்பின் கதை



“விண்ணவர்க்காக அசுரர்களை எதிர்த்து அவர்கள் எயில்கள் மூன்றனையும் அழித்தவன் சோழன் ஆவான். மற்றும் புறாவின் உயிரைக் காப்பாற்றத் தன் உயிரைத் தந்தவனும் ஒரு சோழன் தான்; பசுவின் துயர் கண்டு தன் மகனைத் தேர்க்காலில் மடிவித்தவனும் ஒரு சோழன்தான்; இமயமலையில் புலிக் கொடியைப் பொறித்தவனும் மற்றொரு சோழன் ஆவான்” என்றனர்.

கந்துக வரியில், “தென்னவன் வாழ்க” என்று கூறிப் பந்தடித்து ஆடுவதாகப் பாடினர். ஊசல் வரிப் பாடியவர் கள் சேரனின் வெற்றிச் சிறப்புகளைப் பேசிப் பாராட்டினர். “கடம்பு எறிந்த காவலன் சேரனின் முன்னவன் ஒருவன்; அவன் வெற்றிச் சிறப்பைப் பாடினர். மற்றொரு சேரன் பாரதப் போரில் இருதிறத்தவர்க்கும் சோறு வடித்துக் கொட்டி அவர்கள் பசியைப் போக்கினான்; இவர்கள் செங்குட்டுவனின் முன்னோர் ஆவார்.”

“யவனர்தம் நாட்டைக் கொண்டதோடு இமயத்தில் வில்பொறித்தவனும் இவன் முன்னோன் ஆவான்; மற்றும் தென்குமரியையும் தம்குடைக் கீழ்க் கொண்டவனும் சேர அரசருள் ஒருவனாவான்; வில், கயல், புலி இவற்றிற்குப் பெருமை தேடித் தந்த தமிழ் மன்னன் சேரன் செங் குட்டுவன்; அவன் திறம் பாடுவோம்” என்று சிறப்பித்துக் கூறினர்.

வள்ளைப் பாட்டில் மூவர் திறமும் செப்பித் தமிழகம் ஒன்று என்ற எண்ணத்தை அறிவித்தனர். உலக்கை கொண்டு முத்துகளைக் குற்றுவாராயினர்; தீங்கரும்பை நல்லுலக் கையாகக் கொண்டு காஞ்சி மரத்தின் நிழலில் புகார் மகளிர் முத்துக் குற்றுவார் என்று கூறி சோழனின் வெற்றிச் சிறப்பைப் பாடினர். இவ்வாறே பவழ உலக்கை கொண்டு மதுரை மகளிர் குற்றுவார் என்று கூறிப் பாண்டியனின் மீன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/177&oldid=936498" இலிருந்து மீள்விக்கப்பட்டது