பக்கம்:சிலம்பின் கதை.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அரங்கேற்று காதை

19



ஆடல் நிகழ்ச்சி

மாதவி வலக் கால் எடுத்து வைத்து மிதித்து மேடை மீது ஏறி வலப் பக்கம் சார்ந்து நின்றாள். துதிபாடும் தோரிய மகளிர் இடப் பக்கம் ஏறி நின்றனர். நிகழ்ச்சிகள் தொடங்கின.

முதற்கண் தெய்வப் பாடல்கள் இரண்டு அத் தோரிய மகளிர் பாடினர். அவற்றிற்குப் பக்க இசையாகக் கருவி இசையாளர் தொடர்ந்து இசைத்தனர். அவர்கள் பாடி முடித்த பிறகு மாதவி ஆடியும், பாடியும் தன் கலைத் திறத்தை அவையோர் அறியச் செய்தாள். நாடக நூல் காட்டிய இலக்கணம் பிழையாது பல்வகை ஆடல்களையும் கூத்து வகைகளையும் ஆடிக் காட்டினாள்.

அரசன் பாராட்டு

அரசனின் பாராட்டை அவள் பெற்றாள். அதற்கு அடையாளமாகப் பச்சிலை மாலையைப் பரிசாகத் தந்தான். சிறப்புத் தொகையாக ஆயிரத்து எட்டுக்கழஞ்சுப் பொன் தந்து சிறப்பித்தான். தலைக்கோல் பட்டத்தையும் அவளுக்கு அரசன் தந்து பாராட்டினான்.

அவள் தலை அரங்கு ஏறினாள்; அரசனால் பாராட்டப் பெற்றாள்; 'ஆடற் செல்வி' என்று அங்கீகரிக்கப்பட்டாள்.

மாலை ஏற்றல்

கணிகையர் குலத்தில் பிறந்தவள் ஆயினும் ஒருவனோடு வாழ அவள் விரும்பினாள். கண்ணியம் மிக்க வாழ்வில் அவள் கருத்துச் செலுத்தினாள்; தக்கவனைத் தேடித் தரச் சித்திராபதி விரும்பினாள். பச்சிலை மாலைக்கு அரசன் நிச்சயித்த அந்தத் தொகையைக் கொடுத்து அம்மாலையை வாங்குவார்க்கு இவள் உரியவள் என்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/20&oldid=958912" இலிருந்து மீள்விக்கப்பட்டது