பக்கம்:சிலம்பின் கதை.pdf/204

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கோவலன்

203



மகிழ்ச்சியில் இவன் நாட்டம் மிக்கு உடையவன் என்பது தெரிகிறது.

‘குரல்வாய்ப் பாணரொடு நகரப்பரத்தரொடு
திரிதரு மரபின் கோவலன் போல’

வண்டினொடும் இளவேனிலொடும் தென்றல் மறுகில் திரிகின்றது என்று கூறுவர்.

‘வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு
குறுமொழிக் கோட்டி நெடுநகை புக்குப்
பொச்சாப்புண்டு பொருள் உரையாளர்
நச்சுக் கொன்றேற்கு நன்னெறி உண்டோ?’

என்று கூறித் தன் செயல்களைக் கடிந்து கூறுகிறான்.

சிற்றினம் சேர்ந்து சீரழிந்தவன் என்று தெரிகிறது. அதற்குக் காரணம் அவன் இன்ப வேட்கை என்று கூறலாம்.

அன்பும் அறனும் கண்ணகிபால் கண்ட அவன் இன்பத்தை மாதவியிடம் காண்கிறான். அவன் இன்ப வேட்கை கண்ணகியின் பாராட்டுதலில் தெரியவருகிறது. காதல் இன்பத்தைக் கவின் உற எடுத்து உரைக்கின்றான். கலவியை அவளிடம் காண்கின்றான். புலவியை அவளிடம் காண முடிய்வில்லை. 'ஊடுதல் காமத்திற்கு இன்பம்' என்பர் வள்ளுவர். அந்த வாய்ப்பினைக் கண்ணகியிடம் அவன் பெறவில்லை என்று தெரிகிறது. கலவியும் புலவியும் காதலனுக்கு அளித்தது மாதவி.

இவன் மாதவியிடம் கண்டது கவர்ச்சி என்று கூறலாம். 'இவன் கலைகள் அறிந்தவன்; அவற்றில் சுவைத்து மகிழ்பவன். மதுரை சென்றபோது பாணருடன் பழகி அவர்கள் இசை கேட்டு மகிழ்கிறான். கானல் வரிப் பாடல்களை இவனும் பாடுகிறான். மாதவியின் செயல்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/204&oldid=936525" இலிருந்து மீள்விக்கப்பட்டது