பக்கம்:சிலம்பின் கதை.pdf/214

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

213



செய்கிறது. காவியத்தில் ஊழ்வினை தலைமை இடம் பெறுகிறது.


5. அணிநலன்கள்
“உணர்வின் வல்லோர்
அணிபெறச் செய்வன செய்யுள்”

என்பர் நன்னூலார்.

சொல்லுகின்ற செய்திகளை நயம்படக் கூறுதல் புலமை என்று கூறப்படும். அந்த நயம் அணிகளாலேயே பெறப்படுகின்றது.

உவமை அணிகளுள் தலைமையானது; அதைக் கற்பனை நயம்பட அமைக்குப் போது அது கருத்தைக் கவர்கின்றது. கவிஞனின் புலமையை வியக்கச் செய்கிறது.

திங்களைப் போற்றுகிறார்; ஞாயிறு, மழை, புகார் இவையும் போற்றப்படுகின்றன. அவை சோழர் நல்லாட்சி, ஆட்சிப் பரப்பு, கொடைச் சிறப்பு: குடித்தொன்மை இவற்றிற்கு உவமிக்கப்படுகின்றன. இவற்றுள் சொல்லவந்த செய்தி யாது? திங்களா சோழர் ஆட்சியா சிந்திக்க வைக்கின்றார்.

ஒரே கல்லில் இரண்டு கனிகளை விழ வைத்திருக் கிறார். வான் சிறப்பும் அரசு வாழ்த்தும் இரண்டையும் சேர்த்துக் கூறி இருப்பது அவர் கற்பனைத் திறனைக் காட்டுகிறது.

தெய்வங்களையும் மற்று அவர்கள் உடைமைகள் செய்கைகளையும் உவமைப்படுத்துவது அவர் மரபு என்று தெரிகிறது. கண்ணகி திருமகள் வடிவினள் என்றும்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/214&oldid=936536" இலிருந்து மீள்விக்கப்பட்டது