பக்கம்:சிலம்பின் கதை.pdf/215

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

214

சிலம்பின் கதை



வடமீனின் திறம் இவள் திறம் என்றும் கூறுகிறார். முருகனைப் போன்ற அழகன் கோவலன் என்கிறார்.

பிறை நுதல், வேல் கண், வில் புருவம், மெல்லிடை எனச் சொல்ல வந்தவர் சிவபெருமான் தந்த பிறை, முருகன் ஈந்த வேல், மன்மதன் அளித்த வில், இந்திரன் அளித்த வச்சிராயுதம் என்று உவமைகளைச் சிறப்பித்துக் கூறக் காண்கிறோம்.

மயில் போன்ற சாயல், அன்னம் போன்ற நடை, கிளி போன்ற பேச்சு என்று கூற வந்தவர் அவை தோற்று ஓடின என்று கூறுவது நயம் மிக்கதாகும்.

உருவகங்கள் மறக்க முடியாதவை; உவமைகளைவிட உருவகங்களுக்கு ஆற்றல் மிகுதி. சொற்களைக் குறைக்க முடிகிறது. செய்திகள் கொள்வார் விருப்பத்திற்கு விடப் படுகின்றன.

“மாசறு பொன்னே வலம்புரிமுத்தே
காசறு விரையே கரும்பே தேனே”

என்று கூறுவது அழகிய உருவகங்கள் ஆகும்.

எதிர் மறுத்துக் கூறி உருவகங்களை மேலும் சிறப்புப் பெற வைத்து இருப்பதைக் காணமுடிகிறது.

‘மலையிடைப் பிறவா மணியே என்கோ
அலையிடைப் பிறவா அமிழ்தே என்கோ
யாழிடைப் பிறவா இசையே என்கோ’

என்று கண்ணகிக்கு இவற்றை உவமைப்படுத்தி இருப்பது நயம் மிக்கதாக உள்ளது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/215&oldid=936537" இலிருந்து மீள்விக்கப்பட்டது