பக்கம்:சிலம்பின் கதை.pdf/224

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணிநலன்கள்

223



பிரிவின்கண் கோவலன் பெற்றோர்கள் விசாரிக் கிறார்கள். விருந்தினரைப் போற்ற முடியாமைக்கு வருந்தும் நிலையில் வலியச் சிரிக்க விரும்புகிறாள். 'வாயல் முறுவற்கு அவர் உள்ளகம் வருந்தினர்' என்று கூறுவர்.

கண்ணகி கோவலனைப் பிரிந்த நிலையில் அவள் நகைச் சிரிப்பைக் கோவலன் இழந்துவிட்டான் என்று கூறுவது பொருள் பொதிந்ததாக உள்ளது. அந்த முறுவலுக்கு மாதவி தரும் இன்பம் ஈடாகாது என்று கூறுவது போல் 'தவள வாள் நகை கோவலன் இழப்ப' என்ற அத்தொடர் அமைந்துள்ளது.

ஒரே கருத்து மூன்று இடங்களில் வற்புறுத்தக் காண்கிறோம்.

“தன் துயர் காணாத் தகைசால் பூங்கொடி” என்று கவுந்தி அடிகள் உணர்த்துவார்.

“தூமணி வண்ணனை விழுமம் தீர்த்த விளக்குக் கொல்” என்று மாதரி இதே கருத்தைக் கூறுவாள்.

“என்னொடு போந்து ஈங்கு என்துயர் களைந்த
பொன்னே”

என்று கோவலன் கூறுவான்.

“நீணில விளக்கே” என்ற தொடரைக் கோவலன் எடுத்தாள்கிறான்.

மாதரியின் கூற்றிலும் விளக்கு என்ற இதே சொல் லாட்சியைக் காணமுடிகிறது.

“விழுமம் தீர்த்த விளக்குக் கொல்”

என்பாள் அவள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/224&oldid=936547" இலிருந்து மீள்விக்கப்பட்டது