பக்கம்:சிலம்பின் கதை.pdf/226

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோவடிகள்

225


மில்லாமல் விமரிசிக்கும் துணிவு தேவைப்படுகிறது. அந்தத் தனித்தன்மை துறவு உள்ளம் இவரிடம் காணப்படுகிறது.

செங்குட்டுவன் வரம்பு மீறிச் செயல்படுகின்றான். தோற்றவர்களைச் சிறைப்படுத்திக் கல் சுமக்க வைக்கிறான். அவர்களைத் தமிழகத்தின் மற்றைய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கிறான். விளம்பரப் பிரியனாகச் செயல்படுகிறான். அவன் செய்வது தவறு என்று துணிந்து காட்டும் திறனைக் காண முடிகிறது. மாடலனைக் கொண்டு இக்கருத்தைப் பேச வைத்திருப்பது பாராட்டத்தக்கது.

அவர் ஒரு துறவி, கவுந்தியடிகள் என்ற பாத்திரத்தில் 'துறவு' நிலையை நன்கு காட்டுகிறார். துறவிகளும் தவறும் இடமும் உண்டு; இதை வள்ளுவர் காட்டி இருக்கின்றார்.

“குணம் என்னும் குன்றேறி நின்றார் வெகுளி
கணமேயும் காத்தல் அரிது”

என்பர்.

பரத்தனும் பரத்தையும் தரத்தை மீறிப் பேசியபோது, “நரியாகுக” என்று கவுந்தி அடிகள் சபித்து விடுகிறார்.

“நெறியில் நீங்கியோர் நீர் அல கூறினும்
அறியாமை என்று அறிதல் வேண்டும்”

என்று அவருக்கு அறிவு கூறும் நிலை ஏற்படுகிறது.

கோவலன் கண்ணகியோடு அருங்கான் அடைந்து தனித்துயர் உழல்வதை எடுத்துக் கூறுகிறார். அப்பொழுது அவனுக்கு ஆறுதல் கூறுகிறார் கவுந்தி அடிகள்.

துறவு வாழ்க்கையின் உயர்வை எடுத்துக் கூறி அதுவே உயர்ந்தது என்று நியாயங்கள் கூறக் காண்கிறோம். மனை வாழ்க்கை துன்பங்கள் நிறைந்தது; துறவு வாழ்க்கை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/226&oldid=937575" இலிருந்து மீள்விக்கப்பட்டது