பக்கம்:சிலம்பின் கதை.pdf/230

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இளங்கோவடிகள்

229



நாட்டுச் சீர்குலைவு. ஆட்சியில் ஏற்பட்ட தவறு ஒன்றினால் என்பது வற்புறுத்தப்படுகிறது. மக்கள் கொதித்து எழுவார்கள், ஆட்சியாளர்கள் விழிப்புடன் செயல்பட வேண்டும் என்பது அவர் அறிவுரை.

மற்றொன்று ஊழ்வினை உருத்து வந்து ஊட்டும் என்பது. இது காவியச் செய்தியே அன்று கவிஞர் சொல்ல வந்த செய்தி. இங்கேதான் கவிஞர் தம்மைக் காட்டிக் கொள்கிறார். கோவலன் மாதவியை விட்டுப் பிரிந்தது நடைமுறைச் செய்தி, அதற்குக் கூட விதி தான் காரணம் என்கிறார். வீட்டை விட்டு வெளியேறியது; பொற்கொல்லன் கோவலனைச் சந்தித்துக் கொலை உண்டது எல்லாம் ஊழ்வினையின் செயல்கள் என்று வற்புறுத்துகிறார். இந்திய நூல்கள் பெரும்பாலும் சமய அடிப்படையில் தோன்றியவையேயாம். சமயக் கோட்பாடுகள் இல்லாமல் எந்த நூலும் இயங்குவது இல்லை.

இளங்கோவடிகள் அருக சமயத்தவர் என்பதை இந்த அறப்பிரச்சாரத்தால் காட்டி விடுகிறார்.

கவுந்தி அடிகளைக் கொண்டு சமணக் கோட்பாடு களை ஆங்காங்குக் கூறக் காண்கிறோம். மாங்காட்டு மறையவனிடம் பேசும் பேச்சுரைகள் சமயச் சார்பு கொண்டவை. சமண சமயக் கோட்பாடுகள் இந்நூலில் தலைமை பெறுகின்றன.

எனினும் மக்கள் கொள்ளும் சமய நம்பிக்கைகளுக்கு மதிப்புத் தருவதைக் காண முடிகிறது. வேட்டுவ வரியில் அவர்கள் கொற்றவையை வழிபடுகின்றனர். ஆயர் சேரியில் குரவைக் கூத்து நிகழ்த்துகின்றனர். கண்ணனைப் பற்றிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/230&oldid=937573" இலிருந்து மீள்விக்கப்பட்டது