பக்கம்:சிலம்பின் கதை.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

230

சிலம்பின் கதை



பரவிப் பாடுகின்றனர். அங்குக் கண்ணனுக்கு மதிப்புத் தருகின்றனர்.

குன்றக் குறவர்கள் வேலனைப் புகழ்கின்றனர். தெய்வக் கதைகளை மாதவி ஆடலில் இடம் பெற வைக்கின்றார்.

மாங்காட்டு மறையோன் திருமால் தலங்கள் ஆகிய வேங்கடத்தையும் திருவரங்கத்தையும் காணச் செல்கிறான். “உன் தெய்வங்களை வழிபட நீ போ; நாங்கள் எம் வழிப் படர்வோம்” என்று கவுந்தி அடிகள் கூறுகின்றார்.

இதுவே இளங்கோவடிகள் சமய நோக்கு எனத் தெரிகிறது. எந்தச் சமயமும் அவரவர் விருப்பப்படி மேற்கொள்ளும் உரிமையை மதிக்கிறார். தம் கொள்கை யையும் வற்புறுத்திக் கூறுகிறார்.

செங்குட்டுவன் திருமாலையும், சிவனையும் வழிபடுவதைக் கூறுகின்றார். மாசாத்துவான் புத்த மதத்தைச் சார்கிறான்; மாதவி பெளத்த மதத் துறவியாகி றாள். சமயப் பொது நோக்கு உடையவர் என்பதைக் காட்டிக் கொள்கிறார்; எனினும் காவியத்தின் நோக்கம் வினை உருத்து வந்து ஊட்டும் என்ற கருத்தை நூல் முழுதும் அமைப்பது. இது அவர் கோட்பாடு; ஆசிரியர் இதில் தம்மை வெளிப்படுத்திக் கொள்கிறார் என்று கூறலாம்.

இறுதியில் சமய எல்லைகளைக் கடந்து மாந்தர் போற்றத்தக்க அறங்களைத் தொகுத்துக் கூறுவதைக் காண்கிறோம். சமய எல்லையைக் கடந்து பொது அறங்களைக் கூறக் காண்கிறோம். இவ்வகையில் இவர் வள்ளுவரைப் பின்பற்றிக் கூறுவதைக் காண முடிகிறது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/231&oldid=936554" இலிருந்து மீள்விக்கப்பட்டது