பக்கம்:சிலம்பின் கதை.pdf/31

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

30

சிலம்பின் கதை


களுக்கும் விழா எடுக்கப்பட்டன. அறச் சாலைகளில் அவர்கள் விழா எடுத்தனர். சிறைப்பட்ட பகை மன்னரை அரசன் விடுவித்தான்.

அங்கங்கே இசை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. தென்றல் வீசும் தெருக்களில் காமக் கணிகையர் கண்களுக்கு விருந்து அளித்தனர், அவர்கள் வடிவழகில் மயங்கி ஆடவர்கள் அவர்களோடு உறவு கொண்டனர்.

இந்தக் காதற்பரத்தையர் பேரழகு ஆடவர்களைத் திகைக்க வைத்தது. வானத்துத் திங்கள் வையகத்துக்கு வந்ததோ என்று வியந்தனர். திருமகளைத் தேடித் தாமரைம்லர் இங்கு வந்து புகுந்ததோ என்று பேசினர். கூற்றுவன் பெண் உருக் கொண்டு எம்மைப் பேதமைப் படுத்துகிறானோ என்றும் அஞ்சினர்; வானத்து மின்னல் மண்ணில் வந்து புரள்கிறதோ என்று வியந்து பேசினர். இத்தகைய அழகு உடையவர்கள்பால் தம்மைப் பறிகொடுத்துக் களி மகிழ்வு எய்தினர். அவர்களோடு தோய்ந்ததால் அவர்கள் மார்பில் எழுதியிருந்த தொய்யில் இவர்கள் மெய்யில் படிய அது இவர்களைக் காட்டிக் கொடுத்தது.

ஊடல் கொள்வதற்கு இந்தக் காமக் கணிகையர்தம் உறவு விட்டு மகளிர்க்குக் காரணம் ஆகியது. ஊடலைத் தீர்ப்பதற்கு அவர்கள் பட்ட பாடு ஏட்டில் எழுத முடியாது; விருந்தினர் வந்தால் ஊடல் தீர்வர். அதுவும் மருந்தாக அமையவில்லை; சுவைமிக்க வாழ்க்கை

மாதவியும் கண்ணகியும்

இது இந்திர விழாவில் நடைபெற்ற நிகழ்ச்சிகளுள் ஒன்று; இந்நிலையில் மாதவியின் நிலை யாது? செங்கழு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/31&oldid=963695" இலிருந்து மீள்விக்கப்பட்டது