பக்கம்:சிலம்பின் கதை.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

44

சிலம்பின் கதை


“கடல் அலையே அவன் கடந்த வழியின் சுவடுகளை எல்லாம் நீ அழித்து விட்டாய், நீயும் அவனைப் போல் கொடியை, இரக்கமே இல்லாமல் போய்விட்டது உனக்கு”

“வழியின் சுவடுகளை அழிக்கும் கடலே; சோலையே! அன்னப்பறவையே! தண்துறையே! அவரைப் பார்த்து இது தகாது என்று கூறமாட்டீரா?”

“கடல் அலையே! அவர் சென்ற தேரின் சுவடுகளை ஏன் அழித்தாய்? அவரைப் பற்றிய நினைவுகளை அழிப்பதால் உனக்கு என்ன நன்மை? நீ எனக்குப் பகையாகின்றாய்; உன்னோடு இனி எனக்கு உறவே தேவை இல்லை”

இனிக் கூறுவன தோழியின் கூற்றுகள்: “கடல் சேர்ப்பனே! இவள் நெஞ்சு மன்மதன் அம்புகளால் துளைக்கப்பட்டுவிட்டது. இந்தப் புண் அதனை அவள் அன்னை அறிந்தால் அவளுக்கு யாது கூறுவது?”

“மாரிக் காலத்துப் பீர்க்கம்பூ போல் பூத்தது பசலை; தெய்வத்திடம் முறையிட்டு இந்நோய் தீர வழிபடுவாள் அன்னை. யார் இக்கொடுமை செய்தது என்று கேட்டால் என்ன பதில் கூறுவது?”

“தனிமையில் தலைவி துன்பம் அடைந்து தளர்வாள்; இதனை அவள் வாய்விட்டுக் கூறமுடியாமல் தவிப்பாள், அன்னைக்கு இதனை எப்படி எடுத்துக் கூற முடியும்?”

இக்கூற்றுகள் தோழி கூற்றாக அமைந்துள்ளன. மாலைப் பொழுது தலைவியை வாட்டுகிறது; இதே நிலை தலைவனுக்கு உளதாகுமோ என்று இனித் தலைவி கேட்கிறாள்.

“மெல்ல இருள் பரந்தது; சூரியன் மறைந்துவிடக் கண்கள் நீர் உகுக்கின்றன; தோழி! இதே மயக்கம் தரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/45&oldid=963714" இலிருந்து மீள்விக்கப்பட்டது