பக்கம்:சிலம்பின் கதை.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

56

சிலம்பின் கதை


கவுந்தி அடிகள் சந்திப்பு

அவர்களுக்குப் பேச்சுத்துணை தேவைப்பட்டது. அவர்கள் முதன் முதலில் சந்தித்தவர் கவுந்தி அடிகள்; அவர் ஒரு சமணத்துறவி, அவர்கள் தங்கி இருந்த பள்ளி இருந்தது. அவரைக் கண்டு வணங்கித் தொழுதனர்.

இவர்கள் தோற்றம் அவர்கள் ஏற்றத்தைக் காட்டியது. அவர்கள் சீலமும், இறைப்பற்றும் உடையவர்கள் என்பதைக் கவுந்தி அடிகளால் அறிய முடிந்தது. ‘உருவும், குலனும், உயர்பேர் ஒழுக்கமும், பெருமகன் திருமொழி பிறழா நோன்பும் உடையவர் என்பதை எடுத்துக் கூறி உற்ற துயர் யாது’ என்று வினவினார். வீட்டை விட்டு வெளியேறக் காரணம் யாது என்பது அவர் கேட்ட கேள்வியாக அமைந்தது.

கோவலனும் தான் யார்? ஏன் இங்குவந்தான்? இந்தப் பழங்கதைகளைப் பேசாமல் “பொருள் ஈட்டுதற்கு” என்று சுருக்கமாகக் கூறினான். அவர்கள் மன உறுதியைக் கண்டு தெளிந்த கவுந்தி அடிகள் அவர்கள் வழிப்பயணத்தைத் தடுத்து நிறுத்த முயலவில்லை: அவரவர் போக்குகளை அவரவரே வகுப்பது தக்கது; மற்றவர்கள் இடைநின்று தடுப்பது தவறு என்பதை நன்கு அறிந்தவராகிய கவுந்தி அடிகள் அவர்கள் செல்வது மதுரை என்பதை அறிந்தார்.

அவருக்கும் நீண்ட நாள் வேட்கை; தென்தமிழ் நாட்டுத் தீதுதீர் மதுரைக்குச் செல்லவேண்டும் என்ற விருப்பம் இருந்தது. அங்கே சமணநெறி பற்றி மேலும் அறிந்து கொள்ள ஆவல் கொண்டிருந்தார். அறிஞர்கள் உரைகளைக் கேட்டு அறியும் ஆவல் தனக்கு உள்ளதாகக் கூறித் தானும் உடன் வருவதாக உரைத்தார்.

பழம் நழுவிப் பாலில் விழுந்தது. தேனினும் இனிதாக அச்சொற்கள் கோவலனுக்கு இசைத்தன. “அடிகளே! நீரும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/57&oldid=963759" இலிருந்து மீள்விக்கப்பட்டது