பக்கம்:சிலம்பின் கதை.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நாடு காண் காதை

57



வருவதாயின் கண்ணகியின் கடுந்துயர் தீர்ந்தது. தக்க துணை எங்களுக்குக் கிடைத்தது” என்று பதில் உரைத்தான். கவுந்தி அடிகளும் உடன் புறப்பட உடன்பட்டார்.

வழிகளைக் கூறுதல்

அறிவுமிக்கவர்; மதுரை பற்றி நன்கு அறிந்தவர்; போகும் வழிகளையும் அறிந்து வைத்தவர்; அதனால் கவுந்தியடிகள் வழியின் அருமையைத் தான் தெரிந்த அளவு அவர்களுக்கு உரைத்தார். செல்வதற்கு உரிய வழிகள் இரண்டு; சோலை வழியே செல்வது; மற்றொன்று வயல் வழியே செல்வது; இரண்டிலும் உள்ள தடைகள், இடையூறுகள் எவை என்பதை எடுத்துக் கூறினார்.

“வெய்யிலின் கொடுமை தீரச் சோலை வழியே செல்வது தக்கதுதான்; என்றாலும் அவ்வழியில் குறைகள் உள; அவற்றையும் அறிவீராக” என்றார்.

“கிழங்குகளை அகழ்ந்து எடுத்துக் குழிகள் உண்டாக்குவர். அடுத்துள்ள செண்பக மரங்கள் தம் பூக்கள் அவற்றின் மீது படிய அவற்றை மறைத்துவிடும். பூக்கள் தானே என்று அடி எடுத்து வைத்தால் குழிகள் அவை; விழுந்தால் எழுவது அரிது, சரி, அவற்றையும் கணித்து அணித்து உள்ள பலாமரங்கள் செறிந்த பாதை சென்றால் அதன் கனிகள் நடப்பாரின் தலைகளை முட்டும். அவற்றை விலக்கி மஞ்சளும் இஞ்சியும் மயங்கிக் கிடக்கும் பாத்திகளில் சென்றால் அங்கே பலாவின் கொட்டைகள் கூழாங்கல் போல் தடுத்து உறுத்தும்.

சோலைவழி அதனைத் தவிர்த்து வேறுவயல் வழிதேடுவோம் என்றால் நிழல் தரும் மரங்கள் இல்லாத பாதை; எங்கும் வயல்கள்; அங்கே குவளைகள் பூக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/58&oldid=964007" இலிருந்து மீள்விக்கப்பட்டது