பக்கம்:சிலம்பின் கதை.pdf/59

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

58

சிலம்பின் கதை


நீர்நிலைகள். அவற்றில் உள்ள வாளைமீனைக் கவ்வ நீர்நாய் செல்லும்; அவற்றினின்று தப்ப அவ்வாளைகள் நடக்கும் பாதையில் துள்ளி வந்து விழும்; அதனைக் கண்டு இந்த மெல்லியலாள் திடுக்கிடக் கூடும். தீமை நிகழாது; எனினும் அதைக் கண்டு கண்ணகி அஞ்சும் நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது. கரும்பில் விளைந்த தேன் சாறு அடுத்து உள்ள பொய்கையைச் சாரும்; நீர் என்று அள்ளிக் குடித்தால் அது கரும்பின் சாறு ஆகலின் அது மயக்கத்தைத் தரக் கூடும்; அதனால் கண்ணகி வருந்த நேரிடும்; மற்றும் கருவிளை மலர்களைக் களைபறிப்பார் அவற்றை வழியில் போடுவர்; அவற்றில் வண்டுகள் மொய்க்கும்; கருவிளை மலர்தானே என்று காலடி வைத்தால் வண்டுகள் நசுங்கி வருந்தும்; நண்டும் நந்தும் காலடிகளில் நசுங்கிச் சாதலும் கூடும்; உயிர்களுக்கு ஊறு செய்யும் இடையூறு ஏற்பட வாய்ப்பு உள்ளது” என்று வயல் வழியில் உள்ள குறைகளை எடுத்துக் கூறினார்.

முவரும் மதுரை ஏகுதல்

சோலையா வயலா அவர்கள் சிந்தனைக்கு விட்டு விட்டுக் கவுந்தியடிகள் பயணத்துக்குப் புறப்பட்டார். கட்டுச் சோறும் பெட்டிப் படுக்கையுமா எடுத்துச் செல்ல முடியும்? தோளில் தொங்கவிட்ட உறி; அதில் ஒரு சோறு உண்ணும் பிச்சைப் பாத்திரம்; மற்றும் கையில் ஒரு மயிற் பீலி; உயிர்களுக்கு ஊறு நிகழாதபடி தடுக்க அந்த மயிற்பீலி; துறவிக்கு இவையே சொத்துகள்; இவற்றை ஏந்திய நிலையில் அவர்களோடு கவுந்தியடிகள் புறப்பட்டார்.

வழிநடைக் காட்சிகள்

காவிரிக் கரையில் அவர்கள் பயணம் தொடர்ந்தது; அவர்கள் சென்ற வழி வயல்கள் மிக்கு உள்ள வெளிகளே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/59&oldid=964008" இலிருந்து மீள்விக்கப்பட்டது