பக்கம்:சிலம்பின் கதை.pdf/65

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
2. மதுரைக் காண்டம்

11. காடுகளைக் கடத்தல்
(காடுகாண் காதை)

மூன்று குடைகளை அடுக்கி வைத்தது போன்ற முக்குடைக் கீழ் அதன் குளிர் நிழலில் உறையும் தேவன் ஆகிய அருகன்; அவன் ஞாயிறு போன்ற ஒளி படைத்தவன்; அசோக மரத்து நிழலில் அமர்ந்தவன்; அவன் திருவடி வணங்கினர். பின்பு வழிபாடு முடித்து அவ்ஊரில் நிக்கந்தன் பள்ளி என்ற அறப்பள்ளியை அடைந்தனர். அங்கே சமணத் துறவிகள் சிலர் தங்கி இருந்தனர். ஆற்றிடைக் குறையாகிய திருவரங்கத்தில் சாரணர் பெரு மகன்பால் கேட்டு அறிந்த அறமொழிகளைக் கவுந்தி அடிகள் அவர்க்குச் செப்பினார். அத்துறவிகள் தங்கியிருந்த மடத்திலேயே அம்மூவரும் ஒர் இரவு தங்கினர்.

மறுநாள் காலையில் உறையூரைவிட்டுத் தென்திசை நோக்கிச் செல்லப் புறப்பட்டு வைகறை யாமத்தில் உறை யூர் எல்லையைக் கடந்து வழியில் ஒரு சோலையகத்துத் தங்கினர்.

மாங்காட்டு மறையவன்

அப்பொழுது பாண்டியன் புகழைப் பறை சாற்றி யவனாய் ஒரு மாமறையாளன் அவர்கள் முன் வந்து சேர்ந்தான். அவனை நோக்கி “நும் ஊர் யாது? இங்கு வருவதன் காரணம் என்ன?” என்று கோவலன் வினவினான்.

அவன் பாண்டிய நாட்டில் இருந்து வந்தவன் என்பதை அவன் கூற்று நிறுவியது. பாண்டியர் தம் பண்டைப் பெருமைகளை அடுக்கிக் கூறினான். கடல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/65&oldid=964041" இலிருந்து மீள்விக்கப்பட்டது