பக்கம்:சிலம்பின் கதை.pdf/70

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

காடு காண் காதை

69


குறுக்கிட்டுத் தடுக்கும். அச்சம் தராத விரும்பத்தக்க வடிவத்துடன் வந்து காட்சி தரும்; செல்வோரைத் தடுத்து நிறுத்தும். இது ஒரு இடையூறு, அவ்வளவுதான்; அதை மீறிச் சென்றால் மூன்று வழிகளும் சந்திக்கும் மதுரைப் பெருவழியை அடையலாம்; பின் நேரே மதுரை சென்று சேரலாம்” என்று மூன்று வழிகளைப் பற்றியும் விளக்கமாகக் கூறினான்.

இச்செய்திகள் அனைத்தும் கேட்டு அவற்றிற்கு மறுப்பு உரைத்தார் கவுந்தி அடிகள். “பிலம் புகுந்து நலம் பெறத் தேவை இல்லை; அங்கே பொய்கைகளில் முழுகிப் புண்ணியம் தேடத் தேவை இல்லை” என்று புகன்றார். “புண்ணிய தீர்த்தம் முழுகி ஐந்திரம் என்னும் நூலைப் பெறத் தேவை இல்லை. அருகன் அருளிய மெய்ந் நூல் தம்மிடம் உள்ளது” என்று அறிவித்தார். “பவகாரணியில் முழுகிப் பிறப்பு அறியத் தேவை இல்லை. சென்ற பிறப்பின் செய்திகள் எல்லாம் இந்தப் பிறப்பைக் கொண்டு அறிய முடியும்” என்றார். “இட்டசித்தி முழுகி விரும்பியதைப் பெறத் தேவை இல்லை; உண்மைவழி நின்று உயிர்களுக்கு உதவினால் உயர்வு அடைய முடியும்” என்று தெரிவித்தார்; அவ் அந்தணன் அறிவித்த அறிவுரைகளை மறுத்துக் கூறி அவன் கூறிய இடை வழியே செல்லத் தக்கது என்று தேர்ந்து எடுத்தார்.

மறையவனுக்குத் தம் கோட்பாடுகளை அறிவித்து அவனுக்கு விடை தந்து அனுப்பி விட்டுக் கோவலன் கண்ணகியுடன் அன்று அந்த ஊரில் தங்கினார். மறுநாள் மூவரும் புறப்பட்டுக் காட்டு வழியே தொடர்ந்து நடந்தனர்.

கவுந்தி அடிகளும் கண்ணகியும் அயர்ந்து மெய்வருந்தி ஒரு புறம் தங்கி ஓய்வு எடுத்துக் கொண்டனர். இந்த இடைவெளியில் வழியே ஒரு பக்க வழியில் திரும்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/70&oldid=964046" இலிருந்து மீள்விக்கப்பட்டது