பக்கம்:சிலம்பின் கதை.pdf/77

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

76

சிலம்பின் கதை



இந்தப் பசுக்கள் நிறைந்துள்ளன. இச்செல்வம் கண்டு நீ பெருமை கொள்வாய்!”.

பலிக்கொடை படைத்தல்

இவ்வாறு இவர்கள் தம் வெற்றிச்சிறப்பை விளம்பிப் பாடுகின்றனர். அடுத்து அவர்கள் தம்மையே பலியாகத் தந்து கொற்றவைக்குச் சிறப்புச் சேர்க்கின்றனர். அவர்கள் ஆண்மையும், துணிவும், வீரமும் இதனால் புலப்பட்டன; “கொற்றவையே நீ பலி ஏற்றுக் கொள்” என்று வேண்டினர்.

“முனிவர்க்கும் தேவர்க்கும் அருள் செய்யும் தெய்வமே உன் இணையடி தொழுகின்றோம். அடல் வலி எயினர் நின்னை வணங்கித் தரும் பலிக்கடன் இது, நீ தந்த வெற்றிக்கு விலையாக அவர்கள் தம் மிடறு உகு குருதியைத் தருகிறார்கள்; பெற்றுக் கொள்வாயாக”.

“நிணத்தில் இருந்து உகுகின்ற குருதி அதனை ஏற்றுக்கொள்: இது நீ தந்த வெற்றிக்கு ஈடு செய்வதாகும்”

“அடுபுலி அன்ன வேடுவர்கள் துடியும் பறையும் கொட்ட நின் அடிக்குச் செலுத்தும் கடன் இது பலிமுகத்தில் இடும் குருதி இதுவே எம் காணிக்கையாகும். இதனை ஏற்றுக் கொள்வாய்”,

“வழிஇடை வருவோர் மிகுதி யாகட்டும்; அவர்களிடம் பறித்துத் திரட்டும் கொள்ளைகள் பெருகுவது ஆகட்டும். இந்த வேட்டுவர் படைக்கும் மடைப்பலி ஏற்று அருளுக”.

“துடியொடு பகைவர் ஊரில் அடிவைத்து எறிவதற்கு அருள் செய்க; அதற்காக நீ பலிக்கடன் ஏற்பாயாக. அமுதுண்டு தேவர்கள் மடிகின்றனர்; நஞ்சுண்டு நீ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/77&oldid=964868" இலிருந்து மீள்விக்கப்பட்டது