பக்கம்:சிலம்பின் கதை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

சிலம்பின் கதை



அஞ்சிக் கன்றுகளும், யானைகளும், பெண் யானைகளும் நடுங்கின. வெய்யில் நிலைத்துள்ள குன்றுகள் மிக்க நாட்டில் காடுகளில் தீப்பொறி பறந்தது. எங்கும் நெருப்பு எழுந்தது. அத்தகைய கொடுமை மிக்க வேனிற்காலம் முடிவு அடைந்தது. அந்தக் கடை நாளில் கோவலன் மதுரைக்குள் சென்றான்.

கணிகையர் இல்லங்கள்

அவன் களிமகிழ்வு தரும் காமக்கிழத்தியர் வாழும் தெருவினை அடைந்தான். அவர்கள் வாழ்க்கை வளம் மிக்கதாக விளங்கியது. அவர்களை நாடி அரச இளைஞரும், வணிகச் செல்வரும் இங்கு வந்து மகிழ்ந்தனர்.

ஏறிச்செல்ல மூடு வண்டியும், சிவிகையும், தரப் பட்டன. மணிக்கால் அமளிகள் அவர்கள் மாளிகைகளை நிரப்பின. உய்யாவனம் போகும்போது உடன் எடுத்துச் செல்ல மகிழ்வுப்பொருள்கள் தரப்பட்டன. பொன்னால் செய்யப்பட்ட வெற்றிலைப் பெட்டி, கவரி மயிர் கொண்ட வெண்சாமரைகள், கூர்நுண்வாள் இவற்றைத் தம் அரசன் கொடுப்ப அவற்றைப் பெற்றுச் சகல வசதிகளோடு வாழ்ந்தனர். புதுமணம் பெற்றுத் தக்க துணைவரை அவ்வப்பொழுது தேடிக் கொண்டனர்.

வந்த இளைஞர்கள் நறவு மாந்தி மகிழ்வு கண்டனர். அருகிருந்த பெண்டிர் வார்த்துக் கொடுக்க ஆர்த்துக் குடித்தனர்; மது மயக்கத்தில் வண்டுகள் மொய்க்காத இடத்தும் அதை ஒட்டும் பழக்கத்தில் முகத்தில் கை அசைத்து நகைச் சுவை விளைவித்தனர். இலவம்பூ போன்ற வாயிதழ் அதில் இளநகை அரும்ப அவர்கள் பேசிய பசுமைச் சொற்கள் அவற்றை நாவால் எடுத்துத் திரும்பிச் சொல்ல முடியாதவை; அவற்றைக் கேட்டு ஆடவர் மகிழ்ந்தனர். அவர்கள் கண்வெட்டுக்கு இவர்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/91&oldid=936404" இலிருந்து மீள்விக்கப்பட்டது