பக்கம்:சிலம்பின் கதை.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

94

சிலம்பின் கதை



பாண்டியன் பேருரைக் கண்டு மகிழ்வு எய்தினான்; பின்பு பழையபடி கொடிகள் பறந்த மதிற்புறத்தே வந்து சேர்ந்தான்.


15. மாதரியிடம் ஒப்புவித்தல்
(அடைக்கலக் காதை)

பாண்டியன் ஆட்சி பண்பட்ட ஆட்சி; அதுமக்கள் வாழ்வுக்கு நிழலாக இருந்தது; அது அவர்கள் வாழ்வை வளப்படுத்தியது. அவன் செங்கோல் சீர்மையும், தண்மையும், வெற்றிச்சிறப்பும் மதுரை மாநகருக்கு உயர்வு தந்தன. மக்கள் நாட்டை விட்டு நகர்ந்தது இல்லை; வேற்று நாட்டை விரும்பிச் சென்றது இல்லை; தம்நாட்டை நேசித்தனர்; இது அவர்கள் நற்பண்பாகத் திகழ்ந்தது. இந்த மதுரை மூதுார் மாநகரைக் கண்டு திரும்பியவன் அறவோர் பள்ளி இருந்த புறஞ்சிறைப் பொழிலில் புகுந்து தீதுதிர் மதுரை பற்றியும், தென்னவன் மாட்சியைப் பற்றியும் மாதவத்தாட்டியாகிய கவுந்தி அடிகட்குக் கூறினான்.

மாடலன் வருகை

கவுந்தி அடிகளிடம் இவன் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த நேரத்தில் தலைச்செங்கானம் சார்ந்த மறையவன் மாடலன் என்பான் அங்கு வந்து சேர்ந்தான். பொதிகையை வணங்கிவிட்டுக் குமரியில் நீராடித் தீர்த்த யாத்திரை செய்து வீடு திரும்பிக் கொண்டிருந்தான். வழியில் கவுந்தியடிகள் இருந்த இடத்துக்கு வந்து சேர்ந்தான். அவனுக்கு அங்குக் கோவலனையும். கண்ணகியையும் கண்டது வியப்பைத் தந்தது. அவர்கள் அப்பொழுதைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்பின்_கதை.pdf/95&oldid=936408" இலிருந்து மீள்விக்கப்பட்டது