பக்கம்:சிலம்புத் தேன்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் சிறப்பு g

வரம் தரும் காட்சிக்கும் இடையே கிடக்கும் பெருவரலாற்றை முப்பது கா ைத க ளி ல் - மூன்று காண்டங்களில்-சிலப்பதிகார விருந் தாக வாரி வழங்குகிருர் இளங்கோ அடிகள். துரயோராகிய இளங்கோ அடிகள் அளிக்கும் அத்தகைய விருந்திற்கு நிகரான விருந்தினக் காளிதாசனும், ஷேக்ஸ்பியரும், காங்கேயும், வர்ஜிலுங்கூட அளிக்கவில்லை என்று அறிஞர் உலகம் - ஆராய்ச்சியாளர் உலகம் - கூறிப் பெருமிதம் கொள்கிறது. அவ்வாருனல், நம் தமிழன்னை மணி வயிறு குளிரப் பிறந்த தவ முனிவராகிய இளங்கோ அடிகள் அளிக்கும் அவ்விலக்கிய விருந்தினே, அவர் பிறந்த தமிழ்க் குடியிலேயே காங்களும் பிறந்தவர்கள்; அவர் போற்றி வளர்த்த தமிழ் மொழியே எங்கள் உயிரினுமினிய தாய் மொழி, என்று உரிமை கலந்த பெருமையோடு கூறி, உண்டு மகிழக் கொடுத்து வைத்த தமிழர்களாகிய நாம் எவ் வளவு பேறு பெற்றவர்கள்!

சேரர் செய்த சிலப்பதிகாரம் பழுதற்ற முத்தமிழின் பாடல்” என்பது சாலப் பொருந் தும். இயற்றமிழின் இன்பமும், இசைத் தமி ழின் அருமையும், நாடகத் தமிழின் நலமும் சோப்பொருந்தி முற்றும் தமிழ் மணமே கமழும் ஒரு காப்பியத்தை முதற்காப்பியமாகப் பெற்ற பெருமை நம் மொழியின்-இலக்கியத்தின்வரலாற்றின்-தனிச் சிறப்பன்ருே ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/18&oldid=560572" இலிருந்து மீள்விக்கப்பட்டது