பக்கம்:சிலம்புத் தேன்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

2翰 சிலம்புத் தேன்

தெய்வம், பழமை சான்ற வ ஞ் சிமாநகரில் அத்தாணி மணிமண்டபத்தில்-நின் தங்தையின் திருவடி நிழலில் அமர்ந்திருந்த நின்னே நோக்கி, அரசாளும் அழகிய வடிவிலக் கணம் நின்னிடத்தே உண்டு என உரைத்த சோதிடனை. வெகுண்டு பார்த்து, நின் அண்ணன் செங்குட்டுவன் துன்பம் நீங்குமாறு கதிரவன் தோன்றும் கீழ்த் திசையைத் தன் பெயராகக்கொண்டு விளங்கும் குணவாயிற்கோட்டத்தில் புகுந்து உலகாளும் சுமை நீக்கி உள்ளமும் சென்று அறிய வொண்ணா முடிவில்லா முத்தி இன்பத்தை ஆளும் மன்னவன் ஆயின, என்று கூறியது.

இவ்வாறு கண்ணகிக் கடவுள் கூறியதாக இளங்கோ அடிகள் கூறும் சுய சரிதம் இதுவே:

" மாடல மறையோன் தன்னுெடுங் கூடித்

தாழ்கழல் மன்னர் தன்னடி போற்ற வேள்விச் சாலையின் வேந்தன் போனபின் யானுஞ் சென்றேன் ; என்னெதிர் எழுந்து, தேவந் திகைமேல் திகழ்ந்து தோன்றி, 'வஞ்சி மூதூர் மணிமண்டபத்திடை நுந்தை தானிழல் இருந்தோய் ! நின்னே அரைசுவிற் றிருக்குந் திருப்பொறி யுண்டென்று உரைசெய் தவன்மேல் உருத்து நோக்கிக் கொங்கவிழ் நறுந்தார்க் கொடித்தேர்த் தானைச் செங்குட் டுவன்றன் செல்லல் நீங்கப் பகல்செல் வாயிற் படியோர் தம்முன்