பக்கம்:சிலம்புத் தேன்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 25

பினளாகிய கண்ணகியின் முன்னே மதுரை மாதெய்வம் தோன்றி, கொதி அழல் சீற்றம் கொங்கையின் விளைத்தோள் இப்பிறப்பில் இவ்வாறாவதற்குக் காரணமான தொல்லை வினையை' - பழ வினை யை-எடுத்துக் கூறி, கண் ண கியே, இன்றைக்குப் பதினாலாம் நாளின் பக ற் பொழுது நீங்கிய பின் நின் ஆருயிர்க் காதலனை அமரவடிவில் காண்பாய்; மக்கள் வடிவில் நீ அவனைக் காண்பது இனி இல்லை, என்று கூறிய குற்றமில்லாத நற் சொற்களை விளக்கிக் கூறினர் புலவர் பெருந் தகையாராகிய சாத்தனர்.

கேட்டார் இளங்கோ அடிகள் நெஞ்சை யள்ளும் கண்ணகியின் கதையை. அவர் அகக் கண்கள் முன்பு எத்தனை எத்தனையோ இன்ப மும்துன்பமும் நிறைந்த வாழ்க்கைக் காட்சிகள் - தமிழகத்தின் வாழ்விலும் வரலாற்றிலும் பின்னிப் பிணைந்த பெருங் காட்சி க ள்ஒன்றன்பின் ஒன்றாய்த் தோன்றின. அவர் உள்ளம் குமுறியது. பால் வெண்மதியம் கண்ட நீலத்திரைக் கடலாய் அக் கவிஞ ர் பெரு மானர் நெஞ்சம் கொந்தளித்தது. எத்தனையோ நாளாய்த் தம் உள்ளத்தை உயிரை எல்லாம் உருக்கி வார்த்து அழியாத் தமிழ்க் காவியம் ஒன்றை முதன்முதலாக ஆக்க இளங்கோ அடிகள் கொண்டிருந்த எண்ணம் எழுச்சி பெறலாயிற்று. சாத்தனார் கூறிய சரித்திரம் இளங்கோ அடிகளின் கற்பனை மலிந்த இலட்