பக்கம்:சிலம்புத் தேன்.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்பின் குறிக்கோள் 醫護

உளநாள் வரையாது; ஒல்லுவ தொழியாது ; செல்லுந்தேனத்துக்கு உறுதுணை தேடுமின்; மல்லன் ஞாலத்து வாழ்வீர் ஈங்கென்.'

(வரந்தரு காதை : 185-202) பண்பும் பயனும் நிறைந்த தம் காவியத்தை மனங்கசிந்து கேட்டுப் பண்பட்ட மக்களின் மனமாகிய நன்செய் நிலத்தில் சொல்லேர் உழவராகிய இளங்கோ அடிகள் விதைக்கும் அற விதைகளாகிய இவைகளே அவர் காவியத்தின் நோக்கங்களோ ! இப்பகுதியில் இளங்கோ அடிகள் கூறியுள்ள் அறிவுரைகள் யாவும் சிறந்த நீதிகளே எனினும், இப்பகுதியை ஊன்றிப் படிப்பார்-இதன் போக்கையும் நோக்கையும் ஆழ்ந்து கருதுவார்-தம் காவியத்தைப் படித்துப் பண்பட்டவர்கள் பயன் காணும் வகையில் இளங்கோ அடிகள் பொதுவாகக் கூறும் ஓர் அறவுரையாகவே இதைக் கொள்ள இயலும்.

இந்நிலையில் மேற்குறிப்பிட்டுள்ள பகுதிகளில் புதைந்து கிடக்கும் செய்திகள் யாவுமே, சிலப்பதிகாரக்காவியம் மன்பதைக்குணர்த்தும் சிறந்த உண்மைகளாய் இருக்க, அவற்று ளெல்லாம் தலையாயது எது? பெருங்காப்பியம் ஒன்றைச் செய்த இளங்கோ அடிகளின் தலைமையான குறிக்கோள் யாது? இவ்வினாவிற்கு உரிய விடை பதிகத்துள்ளும் நூலுள் ளும் குறிப்பிட்ட ஓரிடத்தில் மட்டுமே அமைந்ததில்லை. நீக்கமற நிறைந்திருக்கும் கடவுள் தத்