பக்கம்:சிலம்புத் தேன்.pdf/45

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சிலம்புத் தேன்

பவன வாள்துதல் திலகம் இழப்பத் தவள வாள்நகை கோவலன் இழப்ப மையிருங் கூந்தல் நெய்யணி மறப்பக் கையறு நெஞ்சத்துக் கண்ணகி'

(அந்தி. 47.57.)

இளங்கோ அடிகளின் இச்சொல்லோவியத்தில் சிந்தனையைச் செலுத்துவார் அடிகளாரின் அருள் நெஞ்சை- பொன்னையும் பொருளையும் போகத்தையும் வெறுத்துக் கற்புத்தவம் நிறைந்த வாழ்க்கையையே போற்றும் துறவு நெஞ்சை-காண்பர். இந்த ஓரிடத்தில் மட்டும் அன்றி, இன்னும் நூலுள் எத்தனையோ இடங்களில் எத்தனையோ பாத்திரங்கள் வாயிலாகக் கண்ணகியின் தெய்வப் பண்பை-தவப்பண்பை-விளக்கிக்கொண்டே போகிறார் அடிகளார். தெய்வமுற்ற முழங்குவாய்ச் சாலினி, "இவளோ, கொங்கச் செல்வி ; குடமலையாட்டி தென்றமிழ்ப் பாவை ; செய்தவக் கொழுந்து ; ஒருமாமணியாய் உலகிற் கோங்கிய திருமா மணி.'

(வேட்டுவ வரி, 47-50) என்று வாழ்த்துகிறார். துறவியராகிய இளங்கோவடிகள்,

கற்புக்கடம் பூண்ட இத்தெய்வம் அல்லது

பொற்புடைத் தெய்வம் யாம்கண் டிலமால்.’

(அடைக்கலக் காதை, 143-144)

என்று போற்றுகிறார். கோவேந்தன் தவறு