பக்கம்:சிலம்புத் தேன்.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 சிலம்புத் தேன்

வேண்டுவதன்றி வேறென்ன நாம் செய்ய வல்லோம்?

முதன்முதல் 1881-ஆம் ஆண்டில் சிலப்பதிகாரப் புகார்க் காண்டத்திற்கு அடியார்க்கு நல்லார் உரையோடு ஒரு பதிப்பு வெளிவந்தது. விக்கிரம ஆண்டு சித்திரை மாதம் வெளிவந்த இப்பதிப்பே சிலப்பதிகாரம் புகார்க் காண்டத்திற்கு உரையோடு முதன்முதல் வெளி வந்த பதிப்பாகும். சிலப்பதிகாரம் அச்சு வாகனம் ஏற செய்யப்பெற்ற முதல் முயற்சியும் இதுவே. இப்பதிப்பை வெளியிட்ட பெரியார் திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் மாணாக்கரும் சென்னை கவன்மெண்டு நார்மன் பாடசாலையில் தமிழ்ப் புலவராயிருந்தவருமான தி. க. சுப்பராயச் செட்டியார் அவர்கள். பல பிரதிகளைக் கொண்டு பரிசோதித்து இப்பதிப்பை இச்சான்றோர் வெளியிட்டார். ஒரு வகையில் இவரைச் சிலப்பதி காரத்திற்கு இருபதாம் நூற்றண்டில் முதன்முதல் உரை காணத் துணிந்த பேரறிவாளர் என்றும் குறிப்பிடல் பொருந்தும். காரணம், அரும்பத உரையிலும் அடியார்க்கு நல்லார் உரையிலும் கானல் வரிக்கு உரிய உரைப்பகுதி கிடைக்காமல் போய்விட்டது. இக்குறையை உணர்ந்த இத்தமிழறிஞர், முதன்முதல் கானல் வரிக்கும் உரை எழுதியே இப்பதிப்பை வெளியிட்டு உள்ளார். இன்றைக்குச் சரியாக 78 ஆண்டு கட்கு முன்பு சென்னை மெமோரியல் அச்சுக்