பக்கம்:சிலம்புத் தேன்.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பின் புகழ் 4響

கூடத்தில் அச்சாகி இப்பதிப்பு வெளிவந்துள் ளது. பெரும்புலவர் டாக்டர். உ.வே. சாமிகா தய்யரின் முதற்பதிப்பு 1892-ஆம் ஆண்டிலே தான் வெளியிடப்பெற்றது. அதற்குப் பதி னேர் ஆண்டுகட்கு முன்பே சுப்பராயச் செட்டி யார் சிலப்பதிகாரத்தைப் பதிப்பித்துள்ளார். ஆயினும், டாக்டர் சாமிநாதய்யர் அப்பதிப்புப் பற்றிக் கம். சிலப்பதிகாரப் பதிப்பில் ஏதும் குறிப்பிடாதது விந்தையே. அதுவும் தாம் கலை பயின்ற ஆசிரியரிடமே அறிவொளி பெற்றுத் தமக்கும் நன்முக அறிமுகமாயிருந்த ஒருவர் முயன்று சாதித்துள்ள இச்சாதனையைப்பற்றி அவர் நன்றி பாராட்டாதது வருத்தத்தையே தருகிறது.

சுப்பராயச் செட்டியார் அரும்பத உரை யாசிரியரைப் போன்று சைவ சமயத்தவராயி னும், சமரச நோக்குடையவரென்பது, அவர் தம் பதிப்பில் அறிவிக்கை என்ற தலைப்பில் எழுதியுள்ள ஆராய்ச்சி முன்னுரைக் குறிப் பால் விளங்குகின்றது. அதே முன்னுரைப் பகுதியில் தம்முடைய சிலப்பதிகாரப் பதிப்பு முயற்சி பற்றி அப்பெருமார்ை எழுதியுள்ள வாச கங்க ள் நெஞ்சை உருக்கும் ர்ேமை படைத்தன."

இந்நூலுக்கு உரை பல உளவேனும், அவற்றுள் அடியார்க்கு நல்லார் உரையே பெரும்பாலும் வழங்குகின்றது. அவ்வுரை வதந்த உரையாய்க் கடினமான நடையாய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/56&oldid=560609" இலிருந்து மீள்விக்கப்பட்டது