பக்கம்:சிலம்புத் தேன்.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

$2 சிலம்புத் தேன்

முன் அப்பேரறிஞர் திரு. தீட்சிதர் அவர்களது சிலப்பதிகார நூலின் ஆங்கில மொழி பெயர்ப் பிற்கு அளித்துள்ள முன்னுரையில் அப்பெரு மகனர் பழந்தமிழ் நூல்களே ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க வேண்டுவதன் அவசியத்தை வற்புறுத்திக் கூறியுள்ள வாசகங்கள் இன்றும் தமிழ் அறிஞர்களின் சிந்தனைக்கும் செயலுக் கும் உரியன" திரு. ஐாலிஸ் பிளாக்குஅவர்கள் தம் முன்னுரையில் சிலப்பதிகாரத்தை அழ கிய பாட்டு என்று போற்றியுள்ள திறம் நம் உள்ளத்தை இன்ப ஊற்ருக்கும்". அழகிய பொருள் என்றும் இன்பம் தரும் என்ற மணி மொழியை உணர்ந்தவர் அல்லரோ அறிஞர் ஜூலிஸ் பிளாக்கு? மேலும், அவர் தம் முன் னுரையில் 1900-ஆம் ஆண்டிலேயே பிரெஞ்சுப் பேரறிஞர் ஜூலிஸ் வின்சன் என்பவர் சிலப் பதிகாரத்தில் வரும் கொலைக்களக் காதையை யும், ஆய்ச்சியர் குரவையையும், துன்ப மாலையை யும் பிரெஞ்சு மொழியில் பெயர்த்துள்ளார் என் ஆறும், சிலப்பதிகாரப் பதிப்பில் டாக்டர் சாமி நாத ஐயர் அக்காவியம் பற்றி வரைந்துள்ள ஆராய்ச்சி முன்னுரையையும் பி .ெ ஞ் சில் மொழி பெயர்த்துள்ளார் என்றும் குறித்திருப் பது நாம் கினேவிற் கொள்ளத் தக்கது.

அண்மையில் அறிஞர். ஏ.எல். பாஷாம் என்பவர்"வியப்பிற்குரிய இந்தியா (The wonder that was India—ap;56 LäljL 1954, 2-glob பதிப்பு:1956) என்னும் பெயரில் அரியதொரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புத்_தேன்.pdf/71&oldid=560624" இலிருந்து மீள்விக்கப்பட்டது