பக்கம்:சிலம்புநெறி.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி - 99

போடு கொண்டு இணைப்பது ஒரு மரபு. நம்மைப் பொருத்தவரையில் மாதவி மண்ணக மகள்தான்்.

ஆனாலும் வான கமகளிரை வென்று விளங்கும் அழகு. பெற்றுப் பொலிந்தாள், ஆடற்கலையில் சிறந்து விளங்கினாள். மாத விக்கு, பிறப்பில் ஒரு குறையுமில்லை 'பெருந்தோள் மடந்தை!'யாக விளங்கினாள்.

மாதவி, யாழ் மீட்டும் கலை கற்றுத் தேறினாள்;. பாடற்கலை பயின்றாள்; ஏழாண்டுகள் ஆடலும் பாடலும் இடைவிடாது பயின்று தேர்ச்சி பெற்றாள். மாதவி அரங் கேற்றத்துக் குரியவளாகி விட்டாள். -

சோழப் பேரரசின் அரங்கில் மாதவி தனது ஆடற். கலையை அரங்கேற்றம் செய்தாள். சோழப் பேரரசன் மாதவியின் ஆடற்கலைத் திறமும் நுட்பமும் கண்டு: மகிழ்வெய்தி தலைக்கோல் தந்து சிறப்பித்தான்். மாதவி சோழ நாட்டின் ஆடற்கலை யரசியானாள். கலை உலகத் தெய்வமானாள்.

மாதவி தலைக்கோலி’யானாள். தலைக்கோல் சிறப்புப்பெற்ற மாதவி ஆயிரத்தெண் கழஞ்சு பசும்பொன் ஒரு நாள் பரிசாகப் பெற்றாள். மாதவி, பிறப்பிற் குன்றாப் பெருந் திருவினளாயினும் சார்பு யாரை விட்டது?

மாதவியை, கலைக்குரிய தெய்வத்தை நாட்டுமரபிற் கேற்ப ஒருவனுக்கு உரிமையாக்க அவள் சுற்றம் முயன்றது. ஆயிரத்தெண் கழஞ்சு பொன் அளித்து மாலையை வாங்கி மாதவியை அடையலாம் என்று கூறப் பட்டாள். .

கோவலன் மாலையை வாங்கினான்; மாதவியின் மனையில் புகுந்தான்்; மாதவியை அடைந்து இன்புற்று. மயங்கி அமைந்தான்்; மாதவியைப் பிரியா இயல்பின

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/101&oldid=702764" இலிருந்து மீள்விக்கப்பட்டது