பக்கம்:சிலம்புநெறி.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

1. சிலம்பு நெறி



வெற்றிக்கு வழி

வாழ்க்கை மலர்ப் பாதையன்று. வாழ்க்கை கரடு முரடான மேடு பள்ளங்களையுடையது. அது மட்டுமா? மனித உருவில் கொடிய விலங்கினங்கள் மறைந்து வாழ்ந்து தீமைகள் செய்யும். இத்தகு மனித வாழ்க்கை அமைப்பில், வெற்றி பெறுதல் எளிதன்று. பகையை வரவேற்றுச் சந்திக்கும் மன உறுதி வேண்டும். வெற்றி பெற வேண்டும்.

பகையைக் கண்டு அஞ்சவேண்டியதில்லை. பகைவன் ஒருவகையில் நமக்குத் தற்காப்பு உணர்வைக் கூடத் தருகிறான். பகைவனைக் கூடப் பாராட்டக் கற்றுக் கொள்ள வேண்டும்.

'நாசம் வந்து உற்ற போதும்
நல்லதோர் பகையைப் பெற்றேன்!”

(கும்ப. வதை. 31)

என்று இராவணன் கூறுவதாகக் கம்பன் கூறுவான். பகைவனைப் போற்றும் பண்பு வரலாற்றில் இடம் பெற்ற மாபெரும் தலைவர்களுக்கு இருந்தது.

சி.-1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/11&oldid=1371594" இலிருந்து மீள்விக்கப்பட்டது