பக்கம்:சிலம்புநெறி.pdf/111

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 0 109

மாதவிக்கு இருந்த ஐயமும் அச்சமும் நீங்கினபாடில்லை. அதனால் கடிந்து கூறவும் தயக்கம்.

ஆனால் தனது உணர்வை வெளிப்படுத்த தேர்ந் தெடுத்த செயல்முறை எளிதில் ஏற்றுக்கொள்ள முடியாததாகிவிடுகிறது. தலைவன் தலைவியிடையே ஒத்த உரிமைகள் உண்டானாலும் தலைமகன் சோரம் போதல் போல தலை மகள் சோரம்போக எந்த மரபும் ஒத்துக்கொள்வதே இல்லை. குறிப்பாகத் தமிழ் நாகரிகம் -ஏற்றுக் கொள்வதே யில்லை.

இந்தச் சூழ்நிலையில் மாதவியின் போக்கு கோவல னுக்கு அதிர்ச்சி தந்தது. அதுவும் கோவலன் தன்செல் வத்தை இழந்த சூழ்நிலையது. செல்வம் இழந்த நிலையில் ஏற்கெனவே கோவலனுக்கு ஒரு தற்கொலை மனப்பான்மை தோன்றிவிட்டது.

தன்னிடம் செல்வம் இல்லையென்ற காரணத்தால் தான்் மாதவி தன்னை மறந்து வேறொருவனை நாடு கிறாள் என்ற முடிவுக்கு கோவலன் வந்துவிட்டான். இது மாதவி எண்ணிப் பார்க்காத ஒன்று உணர்ச்சி வேகத்தில் ...நடந்துவிட்ட ஒன்று.

பிரிவு தோன்றிவிடுகிறது. கோவலன் ஆத்திரத் துடன் பிரிந்து விடுகிறான். ஆனால் கோவலன் நினைந்து பிரிவதற்குரிய அளவுக்கு மாதவி தவறு செய்பவள் அல்லள். அவள் வேறொருவனை நாடுவதாக இருந்தால் வசந்தமாலை போன்றவர்கள் குலவொழுக்க மாகிய பரத்தமையை நாடும்படி தூண்டிய காலத்தி லேயே செய்திருக்கலாம்.

மாதவி கற்புடைய பெண்ணாகக் கோவலனிடத்தில் தங்கி வாழவேண்டும், அவ்வழி பரத்தமைக் குலமரபை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/111&oldid=702774" இலிருந்து மீள்விக்கப்பட்டது