பக்கம்:சிலம்புநெறி.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110 0 தவத்திரு குன்றக்குடி அடிகளார் மாற்ற வேண்டும் என்ற திண்ணிய உறுதி கொண்டி ருந்தாள். - -

அதனால்தான்் கோவலன் கண்ணகியை விட்டுப் பிரிந்த பொழுது ஊழினைக் காரணமாகக் காட்டவே இளங்கோவடிகள், மாதவியைவிட்டு கோவலன் பிரிகிற, பொழுது "ஊழ்வினை வந்து உருத்ததாகலின்” என்று. கூறுகிறார். -

அதனால், குற்றமிலராக இருந்தாலும் போதாது, குற்றங்கள் செய்யாதிருந்தால் மட்டும் போதாது. உணர்ச்சி வேகத்துக்கு ஆட்பட்டு என்ன பேசுகிறோம். என்று தெரியாமலே பேசுவதைத் தவிர்க்க வேண்டும்.

ஆதலால் கோவலன் மாதவியைப் பிரிந்ததற்கு மாதவி முற்றாகக் காரணமல்லள். ஆனாலும் சூழ்நிலை: அவளை ஒரு காரணமாக்குகிறது.

இந்தச் சிறு களத்திலிருந்து மாதவி விரைந்து மீள முயற்சி செய்கிறாள் அம்முயற்சிகளைத் தொடர்வதை பார்ப்போம்.

மாதவியின் முயற்சி

கோவலனது வாழ்க்கையின் வலிமை, வலிமை; யின்மை, நல்லுணர்வுக்குறை, ஆகியன மாதவி அறிந்தி: ருந்ததே! ஆயினும் கலை, கவிதைப் போட்டிகளின் சூழ். நிலைகளில் மாதவி சோர்ந்துவிட்டாள். சோர்வின் விளைவாக கோவலன் பாடிய உத்தியைப் போலவே, மாதவியும் பாடத் தொடங்கினாள். -

ஆனால், விளைவுகள் மோசமாகப் போயின. மாதவி இந்த விளைவுகளை எதிர்பார்க்கவில்லை. கோவலன் பிரிவு, அதிலும் வேனிற் காலத்தில் அவனது பிரிவு:

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/112&oldid=702775" இலிருந்து மீள்விக்கப்பட்டது