பக்கம்:சிலம்புநெறி.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1120 தவத்திருகுன்றக்குடி அடிகளார்

யானவை; உலகில் பிறந்துதுய்ப்பன துய்த்து மகிழ்ந்து நிறைவெய்து தற்குரியன. இதில் காதல் வாழ்க்கை சிறப் புடையது.

உயிர்களுக்குக் காதலுணர்வு தோன்றி வளர்ந்து முறையாகத் துய்த்து மகிழும் விருப்பங்களை உருவாக்க அன்னை உமையம்மை, இன்ப உணர்வைத் தோற்று விக்கும் கரும்பைத் தன் கரத்தில் ஏந்தியிருக்கிறாள்.

- அதுபோலவே அன்னை உமையம்மையின் நோக்கத்தை நிறைவேற்றும் வேனிற்காலத் தலைவன் காமவேளும் கரும்பு வில்லைக் கொண்டிருக்கிறான். காமவேளின் கடமை உயிரினங்கள் தமக்குரிய துணை யைத் தேர்ந்தெடுத்துப் புணர்ந்து மகிழத் துணையா யிருப்பது.

கூடி வாழ்ந்த காதலர் யாதான்ும் ஒருவகையில் சிறு பொழுது பிரியினும் வேனில் தலைவன் வருத்து வான்; உயிரைப் பிரிப்பான். ஆதலால் அருமைக்குரிய தலைவன் பெருமானே! இதனை அறிந்து அருள் செய்க! என்ற வகையில் திருமுகத்தை எழுதி வசந்தமாலையின் வழி கொடுத்தனுப்பினாள். -

மாதவியைப் பிரிந்த கோவலன் இன்னமும் வீட்டுக்குச் செல்லவில்லை. கடைவீதி மருங்கிலேயே சுற்றிக்கொண்டிருக்கிறான். அங்குக் கோவலனைக் கண்டு வசந்தமாலை திருமுகத்தைக் கொடுக்கிறாள்.

கோவலன் நிலை எதிர்மாறாக இருந்தது. கோவலன் மாதவியின் திருமுகத்துக்கிசைந்து வர உடன்படாத தோடு, மாறாக மாதவியைக் கடுஞ் சொற்களால் ஏசித் தீர்க்கிறான். முன்னர் க்கூடி வாழ்ந்த காலத்தில் மாதவி ஊடல் தவிர்த்துக் கூடுதற்குத் துணையாக இருந்த நிகழ்ச்சியைக்கூட நடிப்பு என்று. கூறுகிறான். திருமுகத்தை ஏற்றுக் கொள்ளவே மறுக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/114&oldid=702777" இலிருந்து மீள்விக்கப்பட்டது