பக்கம்:சிலம்புநெறி.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

செழிப்பாக வளர்ந்திருக்கிறாள் என்பதை அறிய முடி கிறது. - - .

மாதவியின் திருமுகம் இதோ

'அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக் கொளல் வேண்டும் குரவர்பணி யன்றியும் குலப்பிறப் பாட்டியோடு இரவிடைக் கழிதற்கு என் பிழைப்பறியாது கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி"

(புறஞ்சேரியிறுத்த காதை 87-92).

கோவலனை அடிகள்' என்று விளித்து எழுது கிறாள்; தன்னை அடியவளாக்கிக் கொண்டு வணக்கத், தைப் புலப்படுத்துகிறாள். மாதவி தன் இரண்டாவது திருமுகத்தைத் தேர்ந்து தெளிந்து எழுதுகிறாள்.

அதுமட்டுமன்று, கோவலனின் மன நிலையைப். போற்றிப் பாதுகாக்குமாறும் ஆற்றுப்படுத்துகிறாள். ஆயினும் அடக்கத்தின் காரணமாகத் தன் கடிதத்தின் சொல், தேர்ந்து தெளியாத சொல்-புன் சொல் என்று. குறிப்பிடுகிறாள். . -

"தாங்கள் பெற்றோர்க்குரிய பணிகளைச் செய்யாமல்

குலத்திற் பிறந்து சிறந்த கண்ணகியோடு எல்லாருக்கும்

வாழ்வளிக்கும் பூம்புகாரை விட்டு இரவில் யாரும் அறியாது சென்றது ஏன்?

அஃது அடியவளாகிய நான் செய்த குற்றத்தினாலா? நான் செய்த குற்றமாக இருப்பின் பெண் பேதைமையால் செய்திருப்பாள் என்று கருதிப் பொருட்படுத்தாது விட்டி ருக்கலாம். அல்லது ஒறுத்துத் திருத்தி இருக்கலாம். கோவலனாகிய நீவிர் குற்றமற்ற காட்சியையுடையவர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/116&oldid=702779" இலிருந்து மீள்விக்கப்பட்டது