பக்கம்:சிலம்புநெறி.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அருமந்த செல்வி மணிமேகலையையும் கூட இளமைப் பருவத்திலேயே பெளத்தத் துறவியாக்குகிறாள். ஏன்? சமூகத்தில் தனக்கு-பணிகையர் குலத்துக்கு இருந்த இழி நிலையை எண்ணி ஏங்குகிறாள்.

தூய்மையையும் காதல் மனை விக்குரிய கடைப் :பிடியையும் மேற் கொண்டோழுகினாலும் எளிதில் தன்னை நீங்கிய கோவலனை நினைந்து வருந்தாது போனாலும் இதற்குக் காரணமாயமைந்த சமுதாய

நியதிகள் மாதவியை வருத்தியிருக்கிறது.

அதன் காரணமாக அவளுக்கு ஏற்பட்ட துயரம் :மிகுதி, கோவலன் கொலையுண்ட செய்தி, மாதவியை மரணத்துக்கு ஆளாக்கவில்லை. அதனால் அவள் கற்பு மூன்றாந் தரத்தது என்பர் அறியாப் பேதையர் சிலர்.

கணவன் இறந்தவுடன் இறப்பது மட்டுந்தான்ா கற்பின் கடமை? அப்படியானால் கண்ணகி கூடத்தான்் உடனே சாகவில்லை.

கற்பு என்பது கணவனை, கணவனின் புகழை, கனவனின் குறிக்கோளைக் காப்பாற்றுவதிலும் அமைந்து கிடக்கிறது.

பாண்டிமாதேவி, பாண்டியன் இறந்தவுடன் உயிர் நீத்தான்், ஆம்! பாண்டியன், பாண்டிமாதேவிக்கென்று யாதொரு கடமையும் விட்டுச் செல்லவில்லை. அதனால் :பாண்டிமாதேவி உடன் உயிர் துறந்தாள்.

- கோவலன் இறந்தவுடன் கண்ணகி இறக்கவில்லை! ஏன்? வாழ்ந்துவிட வேண்டுமென்ற ஆசையா? இல்லை. கோவலன் அவன் மீது கள்வன்' என்று சுமத்தப்பட்ட பழியை மாற்ற வேண்டிய கடமையை விட்டுச் சென்றிருக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/118&oldid=702781" இலிருந்து மீள்விக்கப்பட்டது