பக்கம்:சிலம்புநெறி.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. சேரன் செங்குட்டுவன்

சிலம்பு, தமிழ்த் தேசியக் காப்பியம்! சிலம்பு, தமிழகம் தழி இய இலக்கியம்; பழந்தமிழகத்தின் மூன்று அரசுகளை :யும் போற்றிய இலக்கியம். சோழ, பாண்டிய, சேரநாடு களைப் பற்றுக் கோடாகக் கொண்டு வளர்ந்த இலக்கி வியங்கள் பலப்பல.

தமிழ்நாடு சோழர், பாண்டியர், சேரர் ஆகிய மூவேந்தர்களாலும் - ஆளப்பெற்று வந்தது. இந்த மூவேந்தர்களுள் ேசTா ழ ப் பேரரசர்கள் திருக் கோயில்கள் கட்டுதல், இசை, நடனம், முதலிய கலை களை வளர்த்தல், நிலவளம், நீர்வளம் முதலியன பேணுதலில் அதிக ஆர்வம் காட்டினர். அணை கட்டித் தண்ணிர் தேக்கும் நீர்ப்பாசன நிர்வாக மேலாண்மை யைத் தமிழ்நாட்டு வரலாற்றில் அறிமுகப்படுத்தியது சோழப்பேரரசே! -

அதுபோலவே நில அளவையையும் அறிமுகப் படுத்தியது. மக்களாட்சி முறையைக் குடவோலை மூலம் நடைமுறைப்படுத்திய பெருமை சோழப் பேரரசுக்கு -உண்டு.

  • தமிழரசுகளில் ஊராண்மை சிறந்து விளங்கியது. இன்று மக்களாட்சி நடைபெறும் காலத்தில் கூடப் பழைய
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/120&oldid=702783" இலிருந்து மீள்விக்கப்பட்டது