பக்கம்:சிலம்புநெறி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. சிலம்பு விளைத்த புதுமை

சிலம்பு, தமிழ் இலக்கிய உலகில் பூத்த மலர்களில் மணம் மிக்கது. தூய தமிழ்; தெளிந்த நடை, குறிக்கோள் உள்ள படைப்பிலக்கியம்; முத்தமிழ்க் காப்பியம்; தமிழகம் தழி இய இலக்கியம்; சமூக நலம் பொதுளும் காப்பியம்.

அரசியல் நெறியும் அறநெறியும் உணர்த்தும் காப்பியம்; தமிழர்தம் ஆற்றலை வடபுலம் உணருமாறு செய்த காப்பியம்; உரையிடையிட்ட பாட்டுடைச் செய்யுளாய் அமைந்த படைப்பு: நீதிக்காக அரசை எதிர்த்துப் போராடும் உரிமை வழங்கிய காப்பியம். சிலம்பில் மரபுகளைத் கடந்த புதுமைகள் பல உண்டு. சிலம்பு செய்த புரட்சி போற்றத்தக்கது .

இலக்கியத்தைத் தொடங்கும்பொழுது கடவுளை வாழ்த்தித் தொடங்குதல் மரபு. ஆனால் சிலம்பு திங்கள், ஞாயிறு, மாமழை, பூம்புகார் ஆகியவற்றைப் போற்றித் தொடங்கப்பெறுகிறது. இஃதொரு புதிய நெறி.

திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிஷ் வங்கண் உலகளித்த லான். ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் காவிரி நாடன் திகிரிபோற் பொற்கோட்டு மேரு வலந்திரிவு லான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/129&oldid=702792" இலிருந்து மீள்விக்கப்பட்டது