பக்கம்:சிலம்புநெறி.pdf/138

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1360 தவத்திரு குன்றக்குடி அடிகளார்

தெய்வத்தை நீதித் தெய்வமெனப் போற்றினர். இது. புதிய மரபு; முற்றாகப் புதுமை.

சிலம்பு இலக்கிய யாப்பில் புதுமையாயிற்று. சிலம்பு, பரத்தமையை ஒழித்த புதுமை படைப்பு சிலம்பு, குடி மக்களை- குடிமகள் காற் சிலம்பைப் பாடு பொரு ளாக்கியது புதுமை!

சிலம்பு, குடிமக்கள் அரசை எதிர்த்து வழக்காடும் உரிமையைத் தந்த புதுமை உடையது. அரச நீதியை உயிராகக் கொண்ட அரசர்களை அறிமுகப்படுத்திய புதுமையைச் செய்தது.

சிலம்பு தமிழ் தேசியத்தைக் கண்டது. இது பொதுவில் விளைந்த புதுமை.

口口口

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/138&oldid=702801" இலிருந்து மீள்விக்கப்பட்டது