பக்கம்:சிலம்புநெறி.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 ☐ தவந்திரு குன்றக்குடி அடிகளார்

அரசியல், நிலத்திற்கு நீர் போல; உடலுக்கு உயிர் போல: பெண்ணிற்கு கற்பு போல மனித குலத்திற்கு இன்றியமையாதது. சிறந்த ஆட்சி தனிமனித ஆவல்களுக்கு, ஆர்வங்களுக்கு எதிராக அமையாது. ஆனால் அந்த ஆவல்கள், ஆர்வங்கள் நெறிமுறைப்படி அடையத்தக்கன என்று நெறிப்படுத்தும்-முறைப்படுத்தும்.

சிறந்த ஆட்சி முறை, தனிமனிதனுக்குச் சமுதாய உணர்வுகளையும் உறவுகளையும் வளர்த்துத் தரும். சமுதாய மோதல்களைததூண்டாது; வளர்க்காது. சிறந்த ஆட்சி நிலவும் நாட்டில் உள்ள மக்கள், அரசின் உறுப்புக்களாகத் தங்களை எண்ணுவர்; அரசை ஏமாற்ற மாட்டார்கள். அரசும் மக்களை வஞ்சிக்காது; ஏமாற்றாது.

அரசியல் அறம் முறைப்படி நிகழுமாயின் நாட்டில் வளம் பெருகும்; வறுமை இருக்காது; அமைதி நிலவும்: கலகங்கள் நடைபெறா; உழைப்பு உயர்தவம் என்று போற்றப்பெறும்; உற்பத்தி பெருகும். வல்லோராயினும் வரையறைக்கு. உட்படுத்தப்படுவர்; மெலியோர் நலியார்; எங்கும் இன்பம் தழுவிய ஆக்க வழியிலான சமூக உறவுகள் நிலவும் கால்கொள்ளும் .

அரசு, மனித குலத்தின் அனைத்து சக்திகளையும் பயன்படுத்தி வளர்க்கும்; வழிப்படுத்தும். அரசின் கடமை, தவறுகள் குற்றங்கள் நிகழாத-செய்வதற்குரிய அவசியம் ஏற்படாத சமுதாயத்தைக் காண்பதேயாம். அரசு, சமுதாயத்தை வளர்க்கும் சாதனமேயாம். அதற்குத் தண்டனை வழங்கும் அதிகாரம் உண்டு. ஆயினும், அது கடைசி ஆயுதம்தான்! இத்தகைய நல்லரசை மனிதகுலம், அரசியல் சிந்தனைக் காலத்திலிருந்து பெற்றதா? இல்லவே இல்லை!

ஆட்சி செய்தல் பொறுப்புள்ள பணி. இந்தப் பணியைச் செய்வதற்கு ஒரு மனிதச் சிந்தனை போது

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/18&oldid=1372280" இலிருந்து மீள்விக்கப்பட்டது