பக்கம்:சிலம்புநெறி.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
சிலம்பு நெறி ☐ 23

மாக்கள் நிலை அப்படியல்லவே அவர்கள் துன்பப்படும்பொழுது மட்டுமே மயங்குவர்; அழுவர். இவர்களைத் திருத்த கரும்பைப் பயன்படுத்தும் வழியே பயனுடையதாகுமா? வேறு வழியில்லையா?

மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென்று
அறத்துறை மாக்கள் திறத்தில் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும்
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்”

(சிலம்பு ஊர்காண் 27-32)

என்னும் சிலப்பதிகார அடிகள் எண்ணத் தக்கன.

பெண்டிரும் உண்டு கொல்!

கொலையுண்ட கோவலன் பிணத்தை, கொலையுண்ட இடத்தில் கண்ட கண்ணகி, பாண்டியனின் அவைக் களத்தை நோக்கி, நடக்கிறாள் நீதி கேட்க! ஊர் முழுதும் நீதி கேட்டு நடக்கிறாள்! அப்பொழுது முதன் முதலாக, கண்ணகி, “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று அறை கூவி அழைத்துக் கேட்கிறாள்!

ஏன்? பெண்டிர் இருந்திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்கமாட்டானா? ஒரு நாடு, ஒரு நகரம் என்றிருந்தால் பெண்கள் இல்லாமலா இருப்பார்கள்? கணவனை இழந்த துன்பத்தின் அனுபவத்தை உணரும் நிலையில் “பெண்டிர் இல்லையா?” என்று கேட்டாள் என்பர். இது பொருந்தாது. பெண்டிர் என்பது பொதுப் பெயர். இது என்ன கேள்வி?

பெண் என்பவள் பேணத்தக்கவள் என்பது மட்டு மல்ல. அவள் மற்றவர்களையும் பேனுபவள் என்பதும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/25&oldid=1379530" இலிருந்து மீள்விக்கப்பட்டது