சிலம்பு நெறி ☐ 25
கோவலன், மாதவியிடத்திலேயே தங்கிவிட்டதை இடித்துக்கூறி, இல்லத்திற்கு அழைத்துவரும் பெண்கள் யாரையுமே காணோம்! கோவலனின் தாயும்கூட அப்படித்தான்! ஐயோ பாவம்! இரங்கத்தக்க நிலை! கண்ணகியின் தோழி கூட, கண்ணகியைக் காமவேள் கோட்டம் தொழ அழைக்கிறாளே தவிர, கோவலனை அழைத்து வரும் வாய்ப்பில்லை! இந்த அளவுக்குப் பெண்ணுலகு தரம் தாழ்த்தப்பட்டுவிட்டது.
மதுரையில் மட்டும் என்ன? பாண்டியன் அவைக் களம்! அத்தாணி மண்டபம்! பாண்டியன் அரசு இருக்கையில் அமர்ந்திருக்கிறான்! ஆடல் மகள் ஆடுகிறாள்! அரசன், ஆடலில் ஒன்றிக் கலந்து அனுபவிக்கிறான்! அரசிருக்கையில் உடனிருந்த பாண்டிமாதேவிக்குத் தாங்கமுடியவில்லை! ஆனால் என்ன செய்கிறாள்? ஆடலை நிறுத்த அவளால் இயலவில்லை; இயலாத நிலை! அரசியானாலும் பெண்தானே!
ஆதலால், பாண்டிமா தேவிக்குத் தலைவலி வருகிறது! இல்லை! தலைவலி வந்திருப்பதாகச் சொல்லிப் பிரிகிறாள்! அந்தப் புரத்திற்குச் செல்கிறாள்! இது தான் பாண்டிய நாட்டு நிலை! இத்தகு பெண்டிர், பெண்டிர் அல்லர். போகப் பதுமைகள்! அணிகலன்கள் சுமை தாங்கிகள்! அவ்வளவுதான்!
இதனால்தான் கண்ணகி, “பெண்டிரும் உண்டு கொல்! பெண்டிரும் உண்டு கொல்!” என்று கேட்கிறாள்! அதுமட்டுமா? நல்ல பெண்டிர் முரட்டுத்தனத்திற்கு - வன்கண்மைக்கு மாற்று மருந்து!
தலைவனின் வாழ்க்கைத் துணையாய் அமைந்து அவனுடைய முரட்டுத் தனங்களையெல்லாம் அன்பியலால் மாற்றியமைத்து அவனைத் தெய்வமாக்கு பவள் பெண்! அத்தகைய பெண்டிர் மதுரையில் இருந்
சி.- 2