பக்கம்:சிலம்புநெறி.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26 ☐ தவத்திரு குன்றகுடி அடிகளார்

திருந்தால் கோவலன் கொல்லப்பட்டிருக்க மாட்டான் என்பது கண்ணகியின் துணிபு.

ஆம், உண்மைதான்! பெண். சமுதாயத்தில் பாதி! பெண், வாழ்க்கையில் பாதியல்லள். பெண், வாழ்க்கை முழுதும் தாயாக, உடன் பிறந்தவளாக. மனைவியாக, தோழியாகத் தொடர்ந்து வருகிறாள்! திருவள்ளுவர் காட்டும் பெண், வாழ்க்கைக்குத் துணை நாடுபவள் அல்லள்; துணையாய் அமைபவள்; துணை நலமாக அமைந்து ஆக்கம் தருபவள்.

பெண்டிர்குலம் தரமானதாக அமைந்தால் தனி உடைமைத் தீமைகள் வளரா; கூட்டுக் குடும்பங்கள் நிலவும்; நாட்டில் களவு நிகழாது; கொலை நிகழாது.

பெண்டிர் குலம் ஆக்கத்தினைத் தரும் குலம்! இன்ப அமைதி காக்கும் குலம்! இன்றும் நமது நாடு துன்பங்களால் அலைக்கழிக்கப்படுகிறது. பெண்டிர் இல்லையா? இருக்கின்றனர். இப்பொழுது அவர்கள் தமிழ்ப் பெண்களாக இல்லை. தனி உடைமைப்பற்று, குடும்பப்பாசம் (அன்பு விலக்கல்ல) ஆகிய நச்சுக் குணங்களை எய்தியுள்ளனர். இன்றைய பெண்டிர்களில் பலருக்குப் பொதுமைக்குணம் இல்லை. நாடே வீடு ஆனால்கூட அவர்கள் மனநிறைவு பெறாத நிலை! இந்த நிலை மாற வேண்டும்.

படித்த பெண்கள் இன்று மிகுந்துள்ளனர். இவர்கள் திண்மையுடையவர்களாக விளங்கி, பெண்மைக்கு சிறப்புச் சேர்க்க வேண்டும். பெண்களை விளம்பரப் பொருளாகக் கொச்சைப் படுத்துவதைக் கண்டு கொதித்து எழவேண்டும்.

பெண் பெருமைக்கு உரியவள்; பேணத் தக்கவள்; போற்றத் தக்கவள் என்ற மனப்போக்கு சமுதாயத்தில் உண்டாக வேண்டும். வாழ்வியலில், பெண்ணின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/28&oldid=1379553" இலிருந்து மீள்விக்கப்பட்டது