பக்கம்:சிலம்புநெறி.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிலம்பு நெறி ☐ 27

பெருமைக்கு எதிராக உள்ள சமுதாய விதிகளில் மாற்றம் காணவேண்டும்.

சராசரியாக வளர்ந்தவர்கள் கூட, கடைப்பிடிக்க முடியாத விதிகள், ஒழுக்க நெறிகள் வற்புறுத்தப் பெறுவதால், ஒழுக்கக் கேடுகளே தோன்றுகின்றன. பெண்ணியலுக்கு ஏற்ப நிலவும் பழந்தமிழ் நெறி, புத்துயிர் பெறவேண்டும்.

இப்பெண்டிர் குலம் நாட்டின் நாகரிகத்திற்கு அரண் செய்யவேண்டும். நாட்டில் மலிந்துள்ள தீமைகளைக்களைய, அவர்கள் அன்பின் ஆற்றலைப் பயன்படுத்த வேண்டும்.

பெண்டிர்கள் வாழும் திருநாடாக, பாரதம் மலர்தல் வேண்டும்! “பெண்டிரும் உண்டுகொல்!” என்ற கண்ணகியின் கேள்விக்கு விடை கண்டாக வேண்டும்.

“சான்றோரும் உண்டு கொல்?’’

கோவலன் கொல்லப்பட்டான்; கள்வன் என்று பழி சுமத்திக் கொல்லப்பட்டான். யாரால் கோவலன் கொல்லப்பட்டான்? நாடோடிகளால் அல்ல. நாடாளும் அரசனால் கொல்லப்பட்டான்!

கண்ணகி ஆற்றாது அலமந்து அழுகிறாள்! ஏன்? கணவனை இழந்த துன்பத்திற்காக அல்ல! கணவனை இழந்த துன்பம் கண்ணகியின் எழுச்சிக்குக் காரணமாய் அமைந்தது. அவ்வளவுதான்! பின் கண்ணகியின் வெகுளலுக்கு யாது காரணம்?

கோவலனைக் கொன்ற அரசு பாதுகாப்புத் தர வேண்டிய நாடாளும் அரசு நாட்டில் கள்வர்கள் தோன்றாமல் காக்க வேண்டிய கொற்றம். ஆனால்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/29&oldid=1383756" இலிருந்து மீள்விக்கப்பட்டது