பக்கம்:சிலம்புநெறி.pdf/33

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



சிலம்பு நெறி ☐ 31

உயிர்களிடையில் ஆங்காரமான போராட்டங்கள். இப் போராட்டத்தில் வல்லாண்மை பெறாதனவற்றை அழித்து வல்லாண்மை வாழ்கிறது! இந்தச் சூழ்நிலையில் தான் ‘தெய்வம்’ என்ற சிந்தனை அரும்புகிறது.

தெய்வம் என்பது சங்க காலத்தில் கடவுளைக் குறித் திருக்கிறது. “மணங்கமழ் தெய்வத்திள நலம்” என்பது திருமுருகாற்றுப் படை. பின்னால் ‘சிறு’தெய்வம்’ என்றால் கிராம தேவதை என்று பொருள் கொண்டனர். ஆனால் ‘சிறு’ என்ற அடைச்சொல் சேர்த்தால்தான்! மேலும், ஊழுக்கும் தெய்வம் என்று பெயர் உண்டு.

ஆனால், ஊழ், தெய்வமாகாது. ஊழின் பயனைச் சேர்ப்பிக்கும் நியதியாகத் தெய்வம் விளங்குவதால் ஊழைத் தெய்வம் என்றும் அழைத்தனர் போலும்!

தெய்வம் என்பது உயர்ந்தது; வேண்டுதல் வேண்டாமை இல்லாதது; உலகியலின் உயிர்ப்பாக இருந்து அதனை இயக்குவது. உலகியலில் மனித ஆற்றலுக்கு அப்பாற்பட்ட ஒழுங்குகளுக்கு - முறை பிறழாத நிகழ்ச்சிகளுக்குக் காரணம் தெய்வம் - கடவுளேயாம்.

தெய்வத்தை ‘நீதி’ என்று திருவாசகம் போற்றும். தெய்வம், வலியாரிடமிருந்து மெலியாரைக் காப்பாற்றுவது; நீதியை நிலை நிறுத்துவது. தெய்வம் பிரார்த்தனைகளால்-பூசனைகளால் மட்டும் அமைதி கொள்வதன்று. தெய்வம் நீதித் தன்மையுடைய ஒப்புரவு வாழ்க்கையையே விரும்புகிறது; வாழ்த்துகிறது.

நீதித் தன்மை பிறழ்ந்த உயிரினங்களைத் தெய்வம் ஒறுக்கும். இதுதான் சமய இயல். ஆனால், காலப் போக்கில் கடவுள்-தெய்வம் லஞ்ச லாவண்யத்திற்குட்பட்டதென்றும், தெய்வமே பலி கேட்கிறது என்றும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/33&oldid=1383841" இலிருந்து மீள்விக்கப்பட்டது