பக்கம்:சிலம்புநெறி.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 ☐ தவத்திரு குன்றக்குடி அடிகளார்

கூறி, தெய்வ நம்பிக்கையை, கேலிக் கூத்தாக்கி விட்டனர்.

இன்று, கடவுளைப் பற்றி அதிகமாகப் பேசுகிறவர்களில் மிகுதியானவர்கள், மனித குலத்தின் பொதுநலம் சார்ந்த இன்ப வாழ்வினுக்குப் பகைவராகத்தான் உள்ளனர்.

இன்றைய நமது சமய உலகம் கடவுளை நினைக்கிறது; மனிதனை மறந்துவிடுகிறது. கடவுளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறது. ஆனால் தம்மைச்சுற்றி வாழும் மனிதருக்கு என்தியும் செய்ய விரும்புவதில்லை. இது தெய்வ நம்பிக்கை ஆகாது; கடவுள் வழிபாடு ஆகாது.

தெய்வ நம்பிக்கை உடையவர்கள் மற்றவர்களின் உரிமைகளை மதிப்பார்கள்; உலகம் உண்ண உண்பார்கள்:உலகம் உடுத்த உடுப்பார்கள். தெய்வம் இருப்பதை நம்புகிறவர்கள், மற்றவர்களை வாழ்வித்து வாழ்வார்கள்.

தெய்வ நம்பிக்கை உள்ள நாட்டில் தீிண்டாமை இருக்காது. பகை வளர்க்கும் வேற்றுமைகள் இராது. எல்லாரும் கூடித் தொழில் செய்வர்; ஒப்புரவு நெறியில் வாழ்ந்தின்புறுவர்; இதுதான் சொர்க்கம்.

சந்து பொந்துகளில் சாதிகள் வாழ்கின்றன! குல, கோத்திரச் சண்டைகளின் பேரிரைச்சல் கேட்கிறது! சோம்பித் திரியும் மதியிலிகள் எங்கும்! தெருவுக்குத் தெரு வறுமொழியாளர்கள்! வம்பரத்தர்கள்! ஒருவரை ஒருவர் அடுதல், தொலைத்தல் ஆகிய இழி செயல்கள்! வறுமை, ஏழ்மையின் கோர தாண்டவங்கள்! இங்ங்னம் விளங்குவது ஒரு நாடாகாது; அதுவும் தெய்வம் இருக்கும் நாடாகாது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/34&oldid=1383849" இலிருந்து மீள்விக்கப்பட்டது