பக்கம்:சிலம்புநெறி.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி ( 4 :

இருந்தும் நெறிமுறைப்படுத்தும் சூழல்கள் வலிமையாக இருந்தும் வஞ்சிப்பத்தனே வெற்றி பெற்றான்! ஏன்? எண்ணிப்பார்க்க வேண்டாமா? எண்ணிப் பார்ப்போமாக!

ஆதலால், அவரவர் தம் எண்ணங்கள், சிந்தனை கள், செயல்கள் பயனைத் தரக்கூடியன; பயனைத் தரும். இங்ங்னம் அவரவர் செயல்களின் பயனைத் துய்க்கும் வழியில் அமைத்து நடத்தும் இயக்கமே ஊழ் எனப் படுவது. 'ஊழ்' ஊழ்த்தல். அதாவது உயிரினிடத் துள்ள செயற்பாடுகளின் பயன்பாடுகள் பரிணமித்து வெளிப்படுதல் என்று பொருள் கொள்ளலாம்.

ஒவ்வொருவரின் நேற்றைய பழக்கம் இன்று முன் வந்து நிற்கிறது. பழக்கம் மிகமிகக் கொடிது. பழக்கம் என்ற தளையிலிருந்து தப்பிக்க வேண்டும் என்றால் பகுத்தறிவு நன்றாக வேலை செய்ய வேண்டும்.

தன்னிடத்தில் தான்ே காட்டும் சலுகைகள்தாட்சண்யங்கள் தவிர்க்கப்படுதல் வேண்டும். ஒருவன் ஒவ்வொரு நாளும் வாழ்க்கையைத் தொடங்கும் பொழுது பகுத்தறிவு கொண்டு தனது நேற்றைய வாழ்க்கையை ஆய்வு செய்து திருத்திக் கொண்டு வளர்த்துக் கொள்ளும் எண் ணத்தைப் பெற வேண்டும். இந்த அடிப்படையில் தோன்றிய பிரார்த்தனை இயக்கம் இன்று, திசை மாறிச் செயற்படுகிறது. ஏன்?

உயிர்கள், பழக்க வாசனைகளின் வழியிலேயே போகின்றன. ஆதலால் நேற்றைய, நேற்றைக்குமுன் நாளைய, உயிர் வாழ்க்கையின் தொடக்க காலம் தொட்டு வாழ்ந்த வாழ்க்கையின் பயன்கள் இன்றைய வாழ்க்கை யின் பழக்க வழக்கங்களின் வாயிலாக நம்முடைய அனுபவத்திற்கு வருகின்றன. இஃதொரு தவிர்க்க இயலாத. தவிர்க்கக் கூடாத நியதி, முறைமை. - சி.-3 .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/43&oldid=702706" இலிருந்து மீள்விக்கப்பட்டது