பக்கம்:சிலம்புநெறி.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிலம்பு நெறி 49

கொள்ள முடியும். இதுதான்் தமிழ் நெறி; வாழ்வியல் நெறியும்கூட இந்த ஊழை இலக்கியங்கள் சமய நூல்கள்

எப்படி விளக்குகின்றன?

தமிழிலக்கியங்களில் தொன்மையானது. புறநானூறு. புறநானூற்றிலேயே ஊழியற் கொள்கை வலியுறுத்தப் படுகிறது. கணியன் பூங்குன்றன் என்ற பெரும் புலவர்,

'யாதும் ஊரே யாவரும் கேளிர் தீதும் நன்றும் பிறர் தர வாரா நோதலும் தணிதலும் அவற்றோரன்ன சாதலும் புதுவ தன்றே வாழ்தல் இனிதென மகிழ்ந்தன்று மிலமே முனிவின் இன்னா தென்றலு மிலமே மின்னொடு வானம் தண்டுளி தலைஇ யானாது கல்பொரு திரங்கு மல்லற் பேர்யாற்று நீர்வழிப் படுஉம் புணைபோல் ஆருயிர் முறைவழிப் படுஉம் என்பது திறவோர் காட்சியில் தெளிந்தனம் ஆகலின் மாட்சியிற் பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே."

(புறம். 192)

என்று பாடியுள்ளார். இந்தப் பாடல் அருமையிலும் அருமையுடையது; சிந்தனைக்குரியது; வாழ்வுக்குரியது.

ஊழின் விளைபுலம், பற்றேயாம். இது எனது ஊர் நான் பிறந்த ஊர்; வாழும் ஊர் என்றெல்லாம் உலகப் பொதுமை நோக்கின்றி, கருதும்பொழுது, பற்றுணர்வு கால் கொள்ளுகிறது. பற்றுக்கள் ஆசைகளைத்தோற்று விக்கும் இயல்பின. ஆசைகள் உயிர்க்கு இன்பம் செய்வன போல் காட்டித் துன்பம் செய்வனவேயாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/51&oldid=702714" இலிருந்து மீள்விக்கப்பட்டது