பக்கம்:சிலம்புநெறி.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

குலம், ஒருகுலம் என்ற உயர் கொள்கையையும் உணர்த்துகிறது.

எல்லாரும் சுற்றத்தினர். ஆதலால் ஒருவருக் கொருவர் நன்மை, செய்து கொள்வர்; ஆனால் தீமை செய்து கொள்ள மாட்டார்; நன்மை செய்து கொள்ள லாம்; செய்து கொள்ள வேண்டும்.

ஆயினும், ஒருவர், ஒருவருக்கு நன்மை செய்யும் பொழுது, நன்மையைச் செய்பவர்கள் உயர்ந்தவர்களாக -வும், நன்மையைப் பெற்றவர்கள், தாழ்ந்தவர்களாகவும் கருத இடம் ஏற்படலாம். அது மட்டுமின்றி, நன்மையின் அடிப்படையில் விருப்பங்களும், தீமையின் அடிப்படையில் வெறுப்புக்களும் தோன்ற இடமுண்டு.

ஆதலால், ஒருவர் நன்மை செய்தாலும் அந்த நன்மை செய்பவர் செய்தே தீரவேண்டிய கடப்பாடும், நன்மை பெறுபவருக்கு நன்மை பெறுதலுக்குரிய உரிமை யும் ஊழின் வழி அமைந்தன என்று கருதுவதின் மூலம் விருப்பு வெறுப்புகளைத் தவிர்க்கலாம்; புதிய ஊழ் தோன்றுதலையும் தவிர்க்கலாம். அதுமட்டுமா?

வாழ்க்கையில் சந்திக்கும் இன்பங்களையும், துன்பங் களையும் கண்டு வெறியுணர்வின்றித்தணிந்த உணர் -வுடன் அல்லது நொந்து கொள்ளும் உணர்வுடன் துய்க்கும் இயல்பும் எளிதில் வருவதன்று. அதுவும் ஊழின் வழிப்பட்டதேயாம்.

“சாதலும் புதுவதன்று”. இங்கு உயிர் நிலையானது; என்றும் இருப்பது. உயிர்க்குச் சாதலும் பிறத்தலும் இல்லை என்னும் தமிழர் கொள்கையை நினைவிற் கொள்ள வேண்டும். ஆனால், உயிர் எடுத்துக் கொள்ளும் உடம்கள் முதுமையடைவதால் அந்த உடலைக் களைந்து புது உடல் எடுத்தலைத்தான்் சாதல்-பிறத்த கிலன்று தமிழ் கூறும். -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/54&oldid=702717" இலிருந்து மீள்விக்கப்பட்டது