பக்கம்:சிலம்புநெறி.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3. கோவலன் ஊழ்

கோவலன் பாடலைக் கேட்ட மாதவி, யாழை மீட்டி, பாடத் தொடங்குகிறாள். மாதவி கோவலனின் உருவகத்தோடு போட்டி போடு கிறாள். ஆம்! அஃதொரு கலைப் போட்டிதான்்!

கலைஞர்களுக்கு, கலைத்துறையில் தாழ்ந்து போகும் எண்ணம் வருவதில்லை. எனவே, மாதவியும் பாடுகிறாள்! மாதவியின் கற்பனை எந்தக் களத்திற் பிறக்கிறது? மாதவியின் கற்பனைக்கும் அவள் ஊழே காரணம். மாதவியின் சென்ற காலப் பழக்கம் என்ன? மாதவி வழிவழி கணிகையர்குல மரபினள். ஆயினும், ஒரு, நெறி நின்று, வாழ ஒருப்படுகிறாள். ஒரு நெறி நின்று வாழ, அவளைக் கோவலன் பிரியாதிருக்க வேண்டும். கோவலன் தன்னைப் பிரிந்து விடுவானோ என்ற அச்சத்திலேயே மாதவி கோவலனை மிகவும் கவனத்துடனும் பரிவுடனும் தன் பால் ஈர்த்து வைத்திருக் கிறாள். -

"ஊடற் கோலமோ டிருந்தோ னுவப்பப் பத்துத் துவரினும் ஐந்து விரையினும் முப்பத் திருவகை ஓமாலி கையினும் ஊறின கன்னி ருரைத்தநெய் வாசம் நாறிருங் கூந்தல் நலம்பெற ஆட்டிப் புகையிற் புலர்த்திய பூமென் கூந்தலை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/58&oldid=702721" இலிருந்து மீள்விக்கப்பட்டது