பக்கம்:சிலம்புநெறி.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அணிந்துரை

நீதி அரசர் பி. வேணுகோபால்

தவத்திரு குன்றக்குடி அடிகளார். தமிழ் கூறும் நல்லுலகத்துக்கு நன்கு அறிமுகமானவர். சிறந்த தமிழ் பற்றாளர். தமிழ் உணர்வு படைத்தவர்கள். அவர்கள் கூறும் கருத்துக்களில் என்றும் புதுமை இருக்கும். சிந்தனையைத் துண்டும். மக்களை நல்வழிப் படுத்த, நெறிப்படுத்த, முறைப்படுத்த தேவையான கருத்துக் கள் இருக்கும். - -

பகுத்தறிவு வாதிகளும் ஏற்றுக் கொள்ளும் ஆன் மிக வாதி. அது அவர்களுடைய தனிச்சிறப்பு. அரசியலுக்கு அப்பாற்பட்டவர். ஆனால் அவருடைய கருத்துக்கள் எல்லா அரசியல் கட்சிகளாலும் மதிக்கப்படும். போற்றப் படும்.

ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்று சிலப்பதிகாரம். சிலப்பதிகாரம் வலியுறுத்தும், மூன்று நெறிகள் எவை என்பதை தவத்திரு அடிகளார். இந்நூலில் அற்புதமாக விளக்கி இருக்கிறார். முதல் நெறி அரசியலில் உள் வர்களுக்கு அறநெறி பற்றி கூறுவது. -

சிந்தனையால், செயலால், மக்களிடத்தில் அன்பு காட்டி மக்கள் இனம் வாழ்வதற்கு உரியவற்றை செய்வது தான்் அறம். தொண்டு மனப்பான்மையுடன் சுயநல மில்லாத செயல்கள் மனதுக்கு தூய்மை தரும். அது தான்் அறம். அதுதான்் அரசியலில் உள்ளவர்கள் பின்பற்ற வேண்டிய அறநெறி, இதுவே சிலம்பு நெறி என்று அற்புதமாக விளக்குகிறார், தவத்திரு அடிகளார் அவர் 蕊婷。 . . . . . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/6&oldid=702667" இலிருந்து மீள்விக்கப்பட்டது