பக்கம்:சிலம்புநெறி.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66 - தவத்திரு குன்றக்குடி அடிகளார்

அவனுடைய பழைய பெருமை உணர்வுகளும் இன்றைய அவனுடைய இழிநிலையும் அவன் எண்ணத். தில் அலை மோதின. அதன் காரணமாக அவன் தயங்கித் தயங்கி நடக்கிறான். அதுமட்டுமா? சிலம்பினை, பொற். கொல்லனிடம் விற்கும் முயற்சியில் கோவலன் அணுக. வில்லை. விலை மதிப்பு கூறும்படிதான்் கேட்கிறான். இதனால் தன்னுடைய பொருளின் விலை மதிப்புக் கூட அறியாமல் அவன் வாழ்ந்திருக்கிறான் என்று தெரிகிறது.

பரம்பரைச் செல்வத்தினால் வந்த தீமை இதுதான்். முயன்று ஈட்டாத பொருளுக்கு யாரும் தகுந்த, மதிப்பினைத் தரமாட்டார்கள். இஃது இயற்கை. இந்த இயற்கைக்கு, கோவலன் விதி விலக்கல்ல. - -

ஆக, உழைத்துப் பொருளிட்டாத பழைய வாழ்க்கை. முறை, பரம்பரைச் செல்வத்தை மேலும் பெருக்க - வளர்க்க முடியாமல், அழித்த, இழிவு ஆகிய, சென்ற காலப் பழக்க வழக்கங்கள், ஊழாக உருப்பெற்று கோவலனைப் பிடர் பிடித்து உந்திச் செலுத்துகின்றன. வலியச் சென்று பொறிவாயில் அகப்படும் விலங்கு போல பொற். கொல்லனிடம் சிக்குகிறான்.

பொற் கொல்லன், வெற்றிகரமாக, தனது பணியை முடித்து, நாடாள்வோனின் காவலருடன், கோவலனிடம் வருகிறான்; கோவலனை, கள்வன் என்று காவலரிடம் காட்டுகிறான். காவலர்கள், கோவலன் கள்வனாக இருக்க மாட்டான் என்று விவாதிக்கின்றனர்.

ஆனால், கோவலன் ஆழ்ந்த மெளனம் சாதிக். கிறான். தன் கையிலிருப்பது தன்னுடைய சிலம்புதான்் என்று கூடச் சொல்லாமல் இருக்கிறான். ஏன்? இருக்க வேண்டிய இடத்திலே இருக்காமல் இழிந்து வீழ்ந்த தற்கொலை மனப்பான்மையிலிருந்து கோவலன் மீண்டானில்லை. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிலம்புநெறி.pdf/68&oldid=702731" இலிருந்து மீள்விக்கப்பட்டது